சிவபுரி உச்சிநாதர் கோயில்

சிவபுரி உச்சிநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும். [1] இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும்.

தேவாரம் பாடல் பெற்ற
சிவபுரி உச்சிநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருநெல்வாயில்
அமைவிடம்
ஊர்:சிவபுரி
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உச்சிநாதர், மத்யானேஸ்வரர்
தாயார்:கனகாம்பிகை
தல விருட்சம்:நெல்லி
தீர்த்தம்:கிருபா சமுத்திரம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

சிறப்பு

தொகு

அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார். இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில் எனவும் வழங்குகின்றனர்.

ஊர்ப் பெயர் வரலாறு

தொகு

சிதம்பரம் நகருக்கு உட்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதியே முற்காலத்தில் "திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது.

தல பெருமை

தொகு
  • சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்துடன் அருள் பாலிக்கின்றனர்.
  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு