சிவப்பு நகரம் ஜெய்ப்பூர்

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரத்தை "இளஞ்சிவப்பு நகரம்" என்கிறார்கள்.[1] அந்த மண்ணின் புவியியல் அமைப்பின்படி, அங்குள்ள பாறைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளை இந்த பாறைகளைக் கொண்டே அமைத்துள்ளனர். 1876 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த வேல்ஸ் இளவரசர் மற்றும் விக்டோரியா மகாராணி ஆகியோர் ஜெய்ப்பூர் வந்த பொழுது, அப்போதைய மன்னர் மகாராஜா ராம்சிங் நகரில் உள்ள வீடுகள் மற்றும் அரசாங்கக் கட்டடங்கள், பழைய அரண்மனைகள், புதிய கட்டடங்கள் என எல்லாமே இளஞ்சிவப்பில் வண்ணம் தீட்டும்படி உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. காரணம் இளஞ்சிவப்பு நிறம் விருந்தினரை உபசரிக்கும் பண்பை உணர்த்தும் வண்ணமாக இருந்ததாம்.

ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள ஆம்பர் கோட்டை

நீலம் நகரம்

தொகு
 
ஜோத்பூர் நகரில் உள்ள வீடுகள் நீல நிறத்தில் காட்சியளிக்கின்றன

ராஜஸ்தானின் மற்றொரு நகரமான ஜோத்பூர் நகரம் "நீல நகரம்" என்று அழைக்கப்படுகிறது.[2] இம்மக்கள் எதனால் இந்நிறத்தை பயன்படுத்தினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. ஒரு சிலர் வெயிலுக்க இதமான தன்மை ஏற்படும் என்கிறார்கள். சிலர் கொசு போன்ற சிறிய பூச்சிகள் அண்டாது என்கிறார்கள்.

பார்வை நூல்

தொகு

மனோரமா இயர் புக்,2017,மலையாள மனோரம்மா பதிப்பு,கோட்டயம் 001,ISSN-0975-3052

மேற்கோள்கள்

தொகு
  1. "இளஞ்சிவப்பு நகரம்". தினமலர் (மே 01,2016)
  2. "அறிவியல் ஆயிரம்". தினமலர்