சிவாங்கி (விமானி)
துணை லெப்டினன்ட் சிவாங்கி (Shivangi) (பிறப்பு 15 மார்ச் 1995 [1] ) இந்திய கடற்படையில் பணியாற்றும் ஓர் இந்தியராவார்.[3] இவர் 2019 திசம்பர் 2 அன்று முதல் பெண் இந்திய கடற்படை விமானி ஆனார்.
சிவாங்கி | |
---|---|
பிறப்பு | 15 மார்ச்சு 1995[1] பாரூ, முசாபர்பூர், பீகார்[2] |
தேசியம் | இந்தியர் |
கல்வி | வாரணாசி ,புனித சோசப் கான்வென்ட் பள்ளி வாரணாசி, சன்பீம் பள்ளி சிக்கிம் மணிப்பால் பல்கலைகழகம், கேங்டாக், இந்தியா (இளங்கலை தொழில்நுட்பம்) |
பணி | வானோடி |
செயற்பாட்டுக் காலம் | 2019–தற்போது வரை |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசிவாங்கி சிங் 15 மார்ச் 1995 அன்று இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் அரி பூசண் சிங் மற்றும் இல்லத்தரசியான பிரியங்கா சிங் ஆகியோருக்கு பிறந்தார். இவர், ஒரு எளிய விவசாய பின்னணியைச் சேர்ந்தவர். தனது குழந்தைப் பருவத்தில், ஒரு அரசியல்வாதி ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி தனது சொந்த கிராமத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் கலந்துகொள்வதைப் பார்த்து இவர் ஈர்க்கபட்டார். இது இவரை ஒரு விமானியாக மாறத் தூண்டியது. இவரது தந்தை, சிறுமிகளுக்கு கல்வி கற்பிப்பதில் பழமைவாத வெறுப்பைக் கடக்க மக்களுக்கு உதவுவதற்காக இவரது பெரிய தாத்தா நன்கொடையளித்த நிலத்தில் கட்டப்பட்ட அரசு மகளிர் பள்ளியின் தலைமையாசிரியராக உள்ளார்.[4]
சிக்கிம் மணிப்பால் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து இயந்திரப் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். 24 வயதான (2019 நிலவரப்படி) இவருக்கு குடும்பப்பெயர் ஏதும் வைக்கவில்லை.[3]
தொழில்
தொகுஅதிகாரிகள் பயிற்சி ஆணையம் - விமானி நுழைவு திட்டத்தின் கீழ் சிவாங்கி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டார்.[5] சூன் 2018 இல், இவர் இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டார். இவர் தொடர்ச்சியான ஆறு மாத படிப்புகளை மேற்கொண்டார்; முதலில் இந்தியக் கடற்படை கல்வி கழகத்தில் கடற்படை நோக்குநிலை பாடநெறி, இரண்டாவது வான்படை கல்விக்கழகத்தில் பிலாட்டஸ் பிசி 7 எம்.கே.ஐ.ஐ விமானத்தில் பயிற்சி பெற்றார். 2019 திசம்பருக்கு முந்தைய ஆறு மாதங்களில், டோர்னியர் விமானத்தை இந்திய கடற்படை விமானப்படை 550இல் பறக்க கற்றுக்கொண்டார்.
சிவாங்கி 2 திசம்பர் 2019 அன்று இந்திய கடற்படையின் முதல் பெண் போர் விமானி ஆனார்.[5][6]
திசம்பர் 2019 நிலவரப்படி, தனது பயிற்சியை முடித்த பின்னர் இவர் கடல்சார் மறுமதிப்பீட்டு (எம்ஆர்) விமானத்தில் செயல்பாட்டு விமானியாக உள்ளார்.[7]
மேலும் இவர், இரஃபேல் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய பெண் போர் விமானி ஆவார்.[8]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "बेमिसाल: पिता शिक्षक-माता गृहिणी, बेटी बनी नौसेना की पहली महिला पायलट". Dainik Jagran (in இந்தி). 3 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
- ↑ "Bihar girl first woman pilot of Indian Navy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 3 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
- ↑ 3.0 3.1 Helen Regan; Omar Khan (2 December 2019). "Indian Navy welcomes its first woman pilot in major milestone for armed forces". CNN. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
- ↑ "'Nurtured the dream as a 10-yr-old': Indian Navy's first woman pilot Shivangi". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
- ↑ 5.0 5.1 "Navy Gets its First Woman Pilot". Ministry of Defence. 2 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03 – via pib.gov.in.
- ↑ "Bihar girl Shivangi becomes first woman fighter pilot in Indian Navy". பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (in ஆங்கிலம்). 2 December 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03 – via தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Shivangi gets ‘wings’ to fly" (in en-IN). தி இந்து. 2019-12-03. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Kochi/shivangi-gets-wings-to-fly/article30142929.ece.
- ↑ "Varanasi's Shivangi Singh to be first woman to fly Rafale". CNN.