மோகனா சிங் ஜித்தர்வால்

மோகனா சிங் ஜிதர்வால் (Mohana Singh Jitarwal ) என்பவர் இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகளில் ஒருவர். [1] இவர் தனது இரு கூட்டாளிகளான பாவனா காந்த் மற்றும் அவானி சதுர்வேதி ஆகியோருடன் முதல் போர் விமானியாக அறிவிக்கப்பட்டார். மூன்று பெண் விமானிகளும் சூன் 2016 இல் இந்திய வான்படை போர் படைக்குள் சேர்க்கப்பட்டனர். அப்போதைய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் அவர்களால் 2016 ஆம் ஆண்டு சூன் 18 ஆம் தேதி தேசத்திற்கு சேவை செய்ய முறையாக நியமிக்கப்பட்டார். [2] சோதனை அடிப்படையில் இந்திய விமானப்படையில் போர் விமானத்தை ஆரம்பிக்க இந்திய அரசு முடிவு செய்த பின்னர், இந்த மூன்று பெண்களும் இந்த திட்டத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மோகனா சிங் (ஜித்தர்வால்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சனவரி 1992 (1992-01-22) (அகவை 32)
ஜுன்ஜுனு, ராஜஸ்தான், இந்தியா
வேலைபோர் விமானி
Military service
பற்றிணைப்பு இந்தியா
கிளை/சேவை இந்திய வான்படை
தரம் விமான லெப்டினன்ட்

சுயசரிதை தொகு

 
2020 ல் அனைத்துலக பெண்கள் நாள் அன்று நாரி சக்தி விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி

மோகனா சிங் புதுடெல்லியின் விமானப்படை பள்ளியிலிருந்தும், பஞ்சாபின் அமிருதசரசு, குளோபல் மேலாண்மை நிற்வுனத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பில் பொறியியல் படிப்பையும் முடித்தார். இவரது தந்தை பிரதாப் சிங் இந்திய விமானப்படை பணியாளராகவும், தாய் மஞ்சு சிங் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். தனது சிறு வயதில், ரோலர் ஸ்கேட்டிங், இறகுப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளிலும், பாடுதல், ஓவியம் போன்ற பிற செயல்களிலும் இவரது விருப்பமிருந்தது.

மார்ச் 9, 2020 அன்று, இவருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது [3]

தொழில் தொகு

சூன் 2019 இல், ஹாக் எம்.கே .132 ஜெட் பயிற்சியாளரில் இந்திய விமானப்படையின் முதல் மகளிர் போர் விமானி ஆனார். 2019 ஆம் ஆண்டில் வானத்திலும், வானத்திலிருந்து தரையிலும் நடக்கும் சண்டை பயிற்சியுடன் ஹாக் எம்.கே .132 இல் 380 மணி நேரத்திற்கும் மேலாக பறந்தார். [4]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Latest Current Affairs and News About Bhawana Kanth - Current Affairs Today". currentaffairs.gktoday.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
  2. Krishnamoorthy, Suresh (2016-06-18). "First batch of three female fighter pilots commissioned" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/First-batch-of-three-female-fighter-pilots-commissioned/article14429868.ece. 
  3. "Flying MiG-21 Bison matter of pride: Flt Lt Bhawana Kanth". Livemint (in ஆங்கிலம்). 2020-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  4. "Mohana Singh becomes first woman fighter pilot to fly Hawk advanced jet". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகனா_சிங்_ஜித்தர்வால்&oldid=3400315" இலிருந்து மீள்விக்கப்பட்டது