சிவானந்த் பாட்டீல்
இந்திய அரசியல்வாதி
சிவானந்த் சித்தராமகௌடா பாட்டீல் (Shivanand Siddaramgouda Patil) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் [2] [3] தற்போது கர்நாடக அரசாங்கத்தில் அமைச்சரவையில் அமைச்சராகவும் பசவனா பாகேவாடியை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். [4]
சிவானந்த் பாட்டீல் | |
---|---|
அமைச்சரவை அமைச்சர், கர்நாடக அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 மே 2023[1] | |
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் |
அமைச்சரவை | இரண்டாவது சித்தராமையா அமைச்சகம் |
அமைச்சகம் மற்றும் துறைகள் | நெசவுத் தொழில்
|
பதவியில் 6 சூன் 2018 – 23 சூலை 2019 | |
ஆளுநர் | வாச்சூபாய் வாலா |
அமைச்சரவை | இரண்டாம் குமாரசாமி அமைச்சகம் |
அமைச்சகம் மற்றும் துறைகள் | உடல்நலம் மற்றும் குடும்ப நலம் |
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
முன்னையவர் | எசு. கே. பெல்லுப்பி |
தொகுதி | பசவன பாகேவாடி சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2004–2008 | |
முன்னையவர் | எசு. கே. பெல்லுப்பி |
பின்னவர் | எசு. கே. பெல்லுப்பி |
தொகுதி | பசவன பாகேவாடி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 ஏப்ரல் 1964 விச்சய்யபுரா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
இரண்டாவது எச். டி. குமாரசாமி அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.
சர்ச்சை
தொகு2023 ஆம் ஆண்டில், விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவதற்கு மாநில அரசின் இழப்பீட்டுத் தொகை ₹5 லட்சம் ஒரு காரணியாக உள்ளது என்று கருத்து தெரிவித்து இவர் சர்ச்சையை கிளப்பினார். [5] 2019-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, விவசாயிகள் தற்கொலையில் கர்நாடகா இரண்டாவது இடத்தில் இருந்தது. [6]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Karnataka cabinet expanded; Byregowda, HK Patil among 24 MLAs sworn in as ministers".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Shivanand S Patil".
- ↑ "Basavana Bagevadi Election Result 2018 live updates: Congress' Shivanand S Patil wins from Basavana Bagevadi". 15 May 2018.
- ↑ "Basavana Bagevadi Election Result 2018 Live: Basavana Bagevadi Assembly Elections Results (Vidhan Sabha Polls Result)". பார்க்கப்பட்ட நாள் 17 August 2020.
- ↑ "Farmers ending life to claim compensation, says minister Shivanand Patil". The New Indian Express. https://www.newindianexpress.com/states/karnataka/2023/sep/06/farmers-ending-life-to-claimcompensation-says-ministershivanand-patil-2612121.html.
- ↑ "Farmers who die by suicide are cowards, says Karnataka agriculture minister". The Indian Express. https://indianexpress.com/article/india/farmers-who-commit-suicide-are-cowards-karnataka-minister-7085668/.