சிவசுப்பிரமணியர் கோயில், பிஜி

(சிவ சுப்பிரமணியர் கோயில், பிஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிறீ சிவ சுப்பிரமணியர் கோவில் (Sri Siva Subramaniya temple) பிஜியில் நண்டி என்ற இடத்தில் உள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். தெற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரும் இந்துக் கோவில் இதுவெனக் கூறப்படுகிறது.[1]

சிறீ சிவசுப்பிரமணியர் கோவில்
Sri Siva Subramaniya temple
பிஜி சிவ சுப்பிரமணியர் கோவின் முன்புறத் தோற்றம்
பெயர்
பெயர்:சிறீ சிவசுப்பிரமணியர் கோவில்
அமைவிடம்
நாடு:பிஜி
அமைவு:நண்டி
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடர்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1986

வரலாற்றுப் பின்னணி

தொகு

1926 ஆம் ஆண்டில் தென்னிந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் இக்கோவிலின் பழைய கட்டடத்தில் தொடங்கப்பட்டது. சன்மார்க்க சங்கத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு 1976 ஆம் ஆண்டில் இங்கு கொண்டாடப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் உதவியுடன் இக்கோவிலுக்கு நிரந்தரமான அர்ச்சகர் ஒருவர் தருவிக்கப்பட்டார். சிவாசாரியார் மகாலிங்கக் குருக்கள் கோவில் நிகழ்வுகளை முறைப்படி நடத்தியதை அடுத்து பெருமளவு பக்தர்கள் இங்கு வருகை தரத் தொடங்கினர்.

 
சிறீ சிவ சுப்பிரமணியர் கோவில்

ஐக்கிய சங்கத்தின் 1976 பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது புதிய கோயிலுக்கான அடிக்கல் பழைய கோயில் பகுதியிலேயே நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் பிஜிக்கான இந்தியத் தூதுவர் பங்கு பற்றினார். 1983 ஆம் ஆண்டில் புதிய காணி வாங்கப்பட்டு 1984 சனவரியில் பூமி பூசை நடத்தப்பட்டது. 1984 ஏப்ரல் மாதத்தில் துணைப் பிரதமரால் புதிய கட்டடத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. பண்டைய திராவிடக் கட்டிடக்கலை வடிவமைப்பில் புதிய கோவில் அமைக்கப்பட்டு 1994 சூலை 15 இல் குடமுழுக்கு வைபவம் இடம்பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Country profile: Fiji", த கார்டியன், ஏப்ரல் 29, 2009

வெளி இணைப்புகள்

தொகு