சிவ நாடார் பல்கலைக்கழகம்
சிவ நாடார் பல்கலைக்கழகம் (Shiv Nadar University) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா பெருநகரில் 2011இல் நிறுவப்பட்ட தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் எச். சி. எல். டெக்னாலஜிஸ் நிறுவனரும் தலைவருமான சிவ நாடார் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.[1][2]
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2011 |
வேந்தர் | சிவ நாடார் |
துணை வேந்தர் | உரூபமஞ்சரி கோசு |
அமைவிடம் | , , இந்தியா |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
இணையதளம் | www |
வரலாறு
தொகுஇந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உரூபமஞ்சரி கோசு பிப்ரவரி 2016இல் பதவியேற்றார்.[3] மார்ச் 2021, இந்தப் பல்கலைக் கழகத்திற்கு ”திறன்மிகு நிறுவன” தகுதி வழங்கப்பட்டது.[4]
கல்வி அமைப்பு
தொகுபல்கலைக்கழகத்தில் 5 பள்ளிகளில் 17 துறைகள் உள்ளன.
பள்ளிகள்
தொகு- பொறியியல் பள்ளி
- விரிவாக்கக் கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டுப் பள்ளி
- மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பள்ளி
- மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் பள்ளி [5]
- இயற்கை அறிவியல் பள்ளி
பாடத்திட்ட அணுகுமுறை
தொகுபல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து படிப்புகளும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன. இளங்கலை ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் (OUR) - இளங்கலை மாணவர்களுக்கு அவர்களின் ஆராய்ச்சி ஆர்வம் குறித்து பேராசிரியருடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
2011 முதல் 2016 வரை, 52க்கும் மேற்பட்ட செயலில் ஆராய்ச்சி திட்டங்களுக்காகப் பல்கலைக்கழகம் ₹ 17.03 கோடிக்கு மேல் கூடுதல் நிதியுதவியினைப் பெற்றது. பல பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் செயல்படுகிறது. ஆராய்ச்சியாளர்களில் ஆசிரியர்கள், முனைவர் பட்ட பிந்தைய ஆய்வாளர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், வருகை தரும் அறிஞர்கள் மற்றும் இளங்கலை மாணவர்கள் அடங்குவர்.
சுற்றுச்சூழலிருந்து பாதரசம் (கன உலோகம்) விசத்தை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான, மந்தமான மற்றும் நிலையான வடிவமாக மாற்றியமைக்கக்கூடிய கலவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகச் சிவ நாடார் பல்கலைக்கழகம் (எஸ்.என்.யூ) அறிவித்தது. இது பாதிப்பில்லாதது மற்றும் கரையாதது.
டெல் மற்றும் சிவ நாடார் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி கூட்டு முயற்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.[7]
தரவரிசை
தொகுதேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசை (NIRF) சிவ நாடார் பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தமாக 82வது இடத்தினையும், பல்கலை அளவில் 56வது இடத்தினையும் 2020 ஆம் ஆண்டில் பெற்றது.
சேர்க்கை
தொகுவிண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பள்ளியின் அடிப்படையில் தகுதித் தேர்வு மூலம் (அளவு திறன், சுருக்க பகுத்தறிவு மற்றும் தகவல்தொடர்பு திறன்) மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.[8][9] ஒவ்வொரு துறையும் துறைசார் மதிப்பீட்டின் அடிப்படையில் சேர்க்கைக்கு மாணவர்களைத் தேர்வுசெய்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Rahul Choudaha (17 August 2013). "Branch campus or partnerships – Or both?". University World News. http://www.universityworldnews.com/article.php?story=20130814170154971.
- ↑ S. Ronendra Singh (1 August 2013). "The rise of an heiress: Roshni Nadar". பிசினஸ் லைன். http://www.thehindubusinessline.com/industry-and-economy/info-tech/the-rise-of-an-heiress-roshni-nadar/article4978444.ece.
- ↑ "Shiv Nadar University appoints Rupamanjari Ghosh as vice-chancellor". தி எகனாமிக் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
- ↑ "Shiv Nadar University Delhi NCR Gets Institution Of Eminence Tag". Moneycontrol.com. 18 March 2021. https://www.moneycontrol.com/news/business/economy/shiv-nadar-university-delhi-ncr-gets-institution-of-eminence-tag-6662031.html.
- ↑ "India Education Diary". Archived from the original on 2017-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
- ↑ Nandi, Kathakali (28 February 2016). "At SNU, the focus is on research" – via www.thehindu.com.
- ↑ Dasgupta, Brinda (13 June 2016). "Dell and Shiv Nadar University sign agreement to drive research and innovation" – via The Economic Times.
- ↑ N, Vijetha S. (5 June 2014). "Shiv Nadar University goes for aptitude test to tap right candidates" – via www.thehindu.com.
- ↑ "Shiv Nadar University". snuadmissions.com.