சி. அனந்தராமகிருட்டிணன்

இந்தியத் தொழிலதிபர்

சிவசைலம் அனந்தராமகிருட்டிணன் (Sivasailam Anantharamakrishnan) (1905 – 18 ஏப்ரல் 1964), அன்புடன் "ஜே" என்று அழைக்கப்படும் இவர், 1945 முதல் 1964 வரை அமல்கமேசன்ஸ் குழுமத் தொழில்களை நிறுவி வழிநடத்திய ஒரு இந்திய தொழிலதிபராவார்.[1]

சிவசைலம் அனந்தராமகிருட்டிணன்
பிறப்பு1905 (1905)
ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்) (தற்போதைய திருநெல்வேலி மாவட்டம்), சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புஏப்ரல் 18, 1964(1964-04-18) (அகவை 58–59)
சென்னை, இந்தியா
பணிதொழிலதிபர்
பிள்ளைகள்அ. சிவசைலம் மற்றும் அ. கிருட்டிணமூர்த்தி

வாழ்க்கை தொகு

1905 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த இவர் திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். 1935 இல், சிம்ப்சன்ஸ் குழும நிறுவனங்களில் செயலாளராக சேர்ந்தார். 1938 இல், சிம்ப்சன்ஸ் குழுமத்தின் நிர்வாகத்தில் முதல் இந்திய இயக்குநரானார்.[2][3][4] இவர் 1953 முதல் 1964 இல் தான் இறக்கும் வரை குழுவின் தலைவராக பணியாற்றினார்.[5]

அனந்தராமகிருட்டிணன் தனது வெற்றிகரமான வணிக நடைமுறைகள், தொழிற்சங்கங்களின் திறமையான மேலாண்மை மற்றும் சென்னையின் தானியங்குத் துறையின் வளர்ச்சியைத் தூண்டியதற்காக "இந்தியாவின் டிட்ராயிட்" என்ற பெயரைப் பெற்றதற்காக நினைவுகூரப்படுகிறார்.[6][7] இதன் விளைவாக, இவர் "தென்னிந்தியாவின் ஹென்றி போர்டு" என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அனந்தராமகிருஷ்ணன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் 1905 நவம்பர் 11 அன்று பிறந்தார்.[8] திருநெல்வேலியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், சென்னையிலுள்ள அரசு வணிகவியல் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.[9] 1930 இல், இவர் பிரேசர் மற்றும் ராஸ் லிமிடெட் நிறுவனத்தில் கணக்காளராக சேர்ந்தார்.[2]

இறப்பு தொகு

அனந்தராமகிருட்டிணன் 18 ஏப்ரல் 1964இல் தனது 59வது வயதில் இறந்தார்.[6][10]

மேற்கோள்கள் தொகு

  1. Muthiah, Pg 52
  2. 2.0 2.1 Muthiah, S.. "The road to amalgamation". 
  3. Subrahmanya, Susheela (1962). Southern Economist. பக். 8. 
  4. Venkataraman, P. (2007). Industrial Relations. APH Publishing. பக். 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-313-0072-5. 
  5. Federation of Indian Chambers of Commerce and Industry (1999). Footprints of Enterprise: Indian Business Through the Ages. Oxford University Press. பக். 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-564774-2. 
  6. 6.0 6.1 Sundaram, V. (April 2007). "Remembering J -A Henry Ford of South India". News Today. http://newstodaynet.com/2007sud/apr07/180407.htm. 
  7. Bhavan's Journal. 1964. பக். 36. 
  8. Ramasamy, Vijaya (2007). Historical Dictionary of Tamils. Scarecrow Press. பக். 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8108-5379-9. 
  9. Rau, K. H. (1964). Transport. பக். 25. 
  10. Bhavan's Journal. 1964. பக். 13. 

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._அனந்தராமகிருட்டிணன்&oldid=3847737" இலிருந்து மீள்விக்கப்பட்டது