சி. சே. மார்ட்டின்

(சி. எக்ஸ். மார்ட்டின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிரிலஸ் சேவியர் மார்ட்டின் (Cyrillus Xavier Martyn, பிறப்பு: 14 மார்ச் 1908)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

சி. எக்ஸ். மார்ட்டின்
C. X. Martyn

நாஉ
யாழ்ப்பாணம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1970–1977
முன்னவர் ஜி. ஜி. பொன்னம்பலம்
பின்வந்தவர் வி. யோகேஸ்வரன்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 14, 1908(1908-03-14)
சமயம் உரோமன் கத்தோலிக்கர்
இனம் இலங்கைத் தமிழர்

மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத் தொகுதியில் 1965 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்திடம் தோற்றார்.[2] அதன் பின்னர் 1970 தேர்தலில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 56 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] இலங்கையில் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தமைக்காக மார்ட்டின் 1971 ஆம் ஆண்டில் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[4][5]

மார்ட்டின் 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 900 வாக்குகளை மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார்.[6] மார்ட்டின் உரோமன் கத்தோலிக்க மதத்தவர் ஆவார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Martyn, Cyrillus Xavier". இலங்கைப் பாராளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2461. 
  2. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results_1965%20GENERAL%20ELECTION.PDF. 
  3. "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF. 
  4. Rajasingham, K. T.. "Chapter 23: Srimavo's constitutional promiscuity". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2002-02-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020213084644/http://atimes.com/ind-pak/DA19Df06.html. பார்த்த நாள்: 2013-10-05. 
  5. வில்சன், ஜெயரட்னம் (1994). S. J. V. Chelvanayakam and the Crisis of Sri Lankan Tamil Nationalism. C. Hurst & Co.. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85065-130-2. http://books.google.co.uk/books?id=_2jvhndxPzQC. 
  6. "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF. 
  7. வில்சன், ஜெயரட்னம் (2010). Electoral Politics in an Emergent State: The Ceylon General Election of May 1970. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 77. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-15311-9. http://books.google.co.uk/books?id=Hj22Puk37IUC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சே._மார்ட்டின்&oldid=3553689" இருந்து மீள்விக்கப்பட்டது