யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி (Jaffna Electorate) என்பது 1931 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம் நகரை உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் உறுப்பினர் கட்சி காலம்
1934 அருணாசலம் மகாதேவா சுயேச்சை 1934-1936
1936 1936-1947
1947 ஜி. ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1947-1960
1952
1956
1960 (மார்ச்) அல்பிரட் துரையப்பா சுயேச்சை 1960-1965
1960 (சூலை)
1965 ஜி. ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1965-1970
1970 சி. சே. மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1970-1977
1977 வெ. யோகேசுவரன் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

அரசாங்க சபைத் தேர்தல்கள்

தொகு

1931 தேர்தல்

தொகு

பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது.[2] தொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு மேலாட்சி (டொமினியன்) அந்தஸ்து வழங்காத காரணத்தால் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கோரியது.[3] இதனால், இலங்கையின் வட மாகாணத்தின் அனைத்து நான்கு தொகுதிகளிலும் (யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை) தேர்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.[3]

1934 இடைத்தேர்தல்

தொகு

வட மாகாணத் தொகுதிகளுக்கு 1934 ஆம் ஆண்டில் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன[4] யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அருணாசலம் மகாதேவா தெரிவு செய்யப்பட்டார்.[4]

1936 தேர்தல்

தொகு

பிரித்தானிய இலங்கையில் இலங்கை அரசாங்க சபைக்கான இரண்டாவது தேர்தல் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்றது. முடிவுகள் வருமாறு:[5]

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
அருணாசலம் மகாதேவா சுயேச்சை - 13,581 16.31%
என். செல்வத்துரை சுயேச்சை - 10,482 16.31%
மொத்த வாக்குகள் 23,963
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 59,915
வாக்குவீதம் 39.99%

நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு

1947 தேர்தல்

தொகு

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  ஜி. ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சைக்கிள் 14,324 73.28%
  அருணாசலம் மகாதேவா ஐக்கிய தேசியக் கட்சி யானை 5,224 26.72%
தகுதியான வாக்குகள் 19,548 100.00%
நிராகரிக்கப்பட்டவை 133
மொத்த வாக்குகள் 19,681
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 42,546
வீதம் 46.26%

1952 தேர்தல்

தொகு

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  ஜி. ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் குடை 12,726 60.48%
  இ. மு. வி. நாகநாதன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] கை 8,317 39.52%
தகுதியான வாக்குகள் 21,043 100.00%
நிராகரிக்கப்பட்டவை 88
மொத்த வாக்குகள் 21,131
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 29,489
வீதம் 71.66%

1956 தேர்தல்

தொகு

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  ஜி. ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 8,914 40.46%
  இ. மு. வி. நாகநாதன் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 7,173 32.56%
  மு. கார்த்திகேசன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நட்சத்திரம் 3,239 14.70%
  அருளம்பலம் விஸ்வநாதன் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 2,703 12.27%
தகுதியான வாக்குகள் 22,029 100.00%
நிராகரிக்கப்பட்டவை 149
மொத்த வாக்குகள் 22,178
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 34,804
வீதம் 63.72%

1960 (மார்ச்) தேர்தல்

தொகு

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
அல்பிரட் துரையப்பா சுயேட்சை சூரியன் 6,201 35.68%
  ஜி. ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 5,312 30.56%
  எஸ். கதிரவேலுப்பிள்ளை இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 5,101 29.35%
  அருளம்பலம் விஸ்வநாதன் லங்கா சமசமாஜக் கட்சி திறப்பு 767 4.41%
தகுதியான வாக்குகள் 17,381 100.00%
நிராகரிக்கப்பட்டவை 92
மொத்த வாக்குகள் 17,473
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 24,299
வீதம் 71.91%

1960 (சூலை) தேர்தல்

தொகு

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[11]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
அல்பிரட் துரையப்பா சுயேட்சை சைக்கிள் 6,313 35.13%
  ஜி. ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கண் 6,015 33.47%
  எஸ். கதிரவேலுப்பிள்ளை இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 5,644 31.40%
தகுதியான வாக்குகள் 17,972 100.00%
நிராகரிக்கப்பட்டவை 84
மொத்த வாக்குகள் 18,056
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,299
வீதம் 74.31%

1965 தேர்தல்

தொகு

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[12]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  ஜி. ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 9,350 42.37%
  சி. எக்ஸ். மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 6,800 30.81%
அல்பிரட் துரையப்பா தராசு 5,918 26.82%
தகுதியான வாக்குகள் 22,068 100.00%
நிராகரிக்கப்பட்டவை 73
மொத்த வாக்குகள் 22,141
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,473
வீதம் 77.76%

1970 தேர்தல்

தொகு

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[13]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  சி. எக்ஸ். மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சி[8] வீடு 8,848 35.59%
அல்பிரட் துரையப்பா சுயேட்சை குடை 8,792 35.36%
  ஜி. ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் 7,222 29.05%
தகுதியான வாக்குகள் 24,862 100.00%
நிராகரிக்கப்பட்டவை 76
மொத்த வாக்குகள் 24,938
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,214
வீதம் 79.89%

1977 தேர்தல்

தொகு

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[14]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
  வி. யோகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 16,251 56.62%
குமார் பொன்னம்பலம் சுயேட்சை மரம் 6,960 24.25%
ஏ. எல். ஏபிரகாம் தராசு 4,349 15.15%
சி. எக்ஸ். மார்ட்டின் குடை 900 3.14%
ஏ. ஜி. ராஜசூரியர் கதிரை 164 0.57%
ஏ. தர்மலிங்கம் சுயேட்சை கப்பல் 77 0.27%
தகுதியான வாக்குகள் 28,701 100.00%
நிராகரிக்கப்பட்டவை 78
மொத்த வாக்குகள் 28,779
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 34,865
வீதம் 83.00%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் வி. யோகேஸ்வரன் யாழ்ப்பாணத் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்[15].

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  2. "Dates of Elections". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம்.
  3. 3.0 3.1 K T Rajasingham (22 September 2001). "Chapter 7: State Councils - elections and boycotts". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 24 சூன் 2009. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 T.D.S.A.Dissanayake. "Chapter 1: Was early universal franchise a disaster?". War or Peace... Sangam. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்". ஈழகேசரி: pp. 6. 1 மார்ச் 1936. 
  6. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  7. "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது
  9. "Result of Parliamentary General Election 1956" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  10. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  11. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  12. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  13. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  14. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2011-12-27.
  15. Wickramasinghe, Wimal (18 January 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". The Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.