சி. கதிரவேலுப்பிள்ளை

(எஸ். கதிரவேலுப்பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிவசுப்பிரமணியம் கதிரவேலுப்பிள்ளை (Sivasubramaniam Kathiravelupillai, 24 அக்டோபர் 1924 - 31 மார்ச் 1981) இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.

எஸ். கதிரவேலுப்பிள்ளை
இலங்கை நாடாளுமன்றம்
கோப்பாய்
பதவியில்
1965–1981
முன்னையவர்எம். பாலசுந்தரம், இதஅக
பின்னவர்எம். ஆலாலசுந்தரம், தவிகூ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-10-24)அக்டோபர் 24, 1924
இறப்புமார்ச்சு 31, 1981(1981-03-31) (அகவை 56)
சென்னை, இந்தியா
அரசியல் கட்சிஇலங்கை தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி
தொழில்வழக்கறிஞர்
சமயம்சைவ சமயம்
இனம்இலங்கைத் தமிழர்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

1924 அக்டோபர் 24 இல் பிறந்த கதிரவேலுப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றவர். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்[1].

அரசியலில்

தொகு

இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்த கதிரவேலுப்பிள்ளை மார்ச் 1960, மற்றும் சூலை 1960 தேர்தல்களில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்[2][3]. பின்னர் 1965 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[4]. தொடர்ந்து அதே தொகுதியில் 1970 தேர்தலில் வெற்றி பெற்றார்[5]. 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் கோப்பாய் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1981 இல் இறக்கும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

எழுதி வெளியிட்ட நூல்கள்

தொகு
  • Glimpses of Western philosophy
  • Omarkhayam songs (மொழிபெயர்ப்பு)
  • coexistence, and not confrontation
  • மேல்நாட்டுத் தரிசன வரலாற்றின் சுருக்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. எம். கே. ஈழவேந்தன் (3 ஏப்ரல் 2005). "S. Kathiravelupillai, MP : A powerful intellectual". சண்டே ஒப்சேர்வர். Archived from the original on 2011-06-05. Retrieved 7 சூன் 2009.
  2. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-12. Retrieved 2011-12-27.
  3. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2011-12-27.
  4. "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13. Retrieved 2011-12-27.
  5. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2011-12-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கதிரவேலுப்பிள்ளை&oldid=3575243" இலிருந்து மீள்விக்கப்பட்டது