சி. சுப்ரமணி

சி. சுப்ரமணி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சி.எஸ். மணி[1] என்றும் அழைக்கப்படுகிறார். இவர் திமுக சார்பாக திருவள்ளூர் தொகுதியிலிருந்து, 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற காரணத்துக்காக இவரது நான்கு சொத்துக்கள் தமிழ்நாடு காவல்துறையின் பிரிவான லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் முடக்கப்பட்டன. அப்பொழுது தமிழ்நாடு அரசின் ஆட்சி பீடத்திலிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஜெ. ஜெயலலிதா இது போன்று பல குற்றச்சாட்டு சாட்டியுரைத்து புலன் விசாரணையை மேற்கொண்டார். இவர், இவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஆகியோர் மீது 2005 ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.[3] போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளும் 2015 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.[4]

உசாத்துணைகள்

தொகு
  1. "DVAC search on former DMK MLAs' premises". The Hindu. 8 October 2003. http://www.thehindu.com/2003/10/08/stories/2003100806950400.htm. பார்த்த நாள்: 2017-05-17. 
  2. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  3. Sangameswaran, K. T. (16 June 2005). "Kannappan charge sheeted". The Hindu. http://www.thehindu.com/2005/06/16/stories/2005061604420600.htm. பார்த்த நாள்: 2017-05-17. 
  4. Raj, Manish (24 July 2015). "Former Tamil Nadu minister Raja Kannappan acquitted in disproportionate assets case". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Former-Tamil-Nadu-minister-Raja-Kannappan-acquitted-in-disproportionate-assets-case/articleshow/48206161.cms. பார்த்த நாள்: 2017-05-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சுப்ரமணி&oldid=3943586" இலிருந்து மீள்விக்கப்பட்டது