சி. தாதுலிங்க முதலியார்

ராவ் பகதூர் சின்னகாவனம் தாதுலிங்க முதலியார் (C. Tadulinga Mudaliar) அல்லது சி. தாதுலிங்கம் (1878 – 1954) என்பவர் இந்தியத் தாவரவியலாளர் ஆவர். இவர் சில தென்னிந்தியப் புற்கள் ஒரு கையேடு எனும் புத்தகத்தினை இந்தியத் தாவரவியல் அறிஞர் கா. இரங்காச்சாரியுடன் இணைந்து எழுதினார். இந்த புத்தகம் தாவரவியலில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. முதலியார் 1942-43ல் சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

1878ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில்[2] பிறந்த முதலியார் கோவையில் உள்ள வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.[3]

முதலியார் 1921ஆம் ஆண்டில் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் கே.ரங்காச்சாரியுடன் சேர்ந்து சில தென்னிந்தியப் புற்கள் குறித்த ஒரு கையேட்டை எழுதினார். இது தாவரவியலாளரிடம் பாராட்டைப் பெற்றது.[2] இவர் லின்னியன் சொசைட்டியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு "ராவ்பகதூர்" பட்டம் வழங்கப்பட்டது.

அரசியல்

தொகு

1942இல் சென்னை மாநகரத் தந்தையாக வி. சக்கரை செட்டியாரை தொடர்ந்து பொறுப்பேற்றார்.[1] இவர் 1943 வரை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார். இவருக்குப் பிறகு சையத் நியாமத்துல்லா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[1]

இறப்பு

தொகு

முதலியார் 1954இல் தனது எழுபத்தைந்து வயதில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 S. Muthiah, ed. (2008). "Appendix 2". Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 438.
  2. 2.0 2.1 "HUH Botanist Record". Harvard University.
  3. Calendar of the University of Madras. University of Madras. 1915. p. 45.
  4. The Madras Journal of Co-operation. 46. 1954. p. 192. 

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1943-1944
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._தாதுலிங்க_முதலியார்&oldid=3147609" இலிருந்து மீள்விக்கப்பட்டது