சி. ராமசாமி
இந்திய அரசியல்வாதி
சி. ராமசாமி முதலியாா் (1905 - ஜூலை 9, 1997), சி. ராமஸ்வாமி என்றும் அறியப்பட்டவர், கும்பகோணத்தைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் மக்களவை உறுப்பினர் ஆவார்.
சி. ராமசாமி | |
---|---|
கும்பகோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1951–1957 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
பின்னவர் | சி. ஆர். பட்டாபிராமன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1905 |
இறப்பு | 9 சூலை 1997 (வயது 92) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
முன்னாள் கல்லூரி | கும்பகோணம் அரசு கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசி. ராமசாமி முதலியாா் ஒரு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் படித்தார் மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்....
அரசியல்
தொகு1939 முதல் 1947 வரை கும்பகோணம் நகராட்சி மன்றத் துணைத் தலைவராக ராமசாமி பணியாற்றினார். 1951 இல் கும்பகோணத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளராக முதல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1951 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
உசாத்துணை
தொகு- Obituary of C. Ramaswamy Mudaliar பரணிடப்பட்டது 2004-09-04 at the வந்தவழி இயந்திரம்