சி. ஆர். பட்டாபிராமன்

இந்திய அரசியல்வாதி

சேத்துப்பட்டு ராமசாமி ஐயர் பட்டபிராமன் (11 நவம்பர் 1906 - 19 சூன் 2001) என்பவர் இந்திய வழக்கறிஞரும், இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய அரசியல்வாதி சி. பி. இராமசாமி ஐயரின் மூத்த மகனாவார். இவர் 1957 முதல் 1967 வரை கும்பகோணம் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கபட்டார். 1966 முதல் 1967 வரை இந்திய ஒன்றிய அமைச்சராகவும் பணியாற்றினார்.

சி. ஆர். பட்டாபிராமன்
சட்டம் மற்றும் நிறுவன விவகாரத் துறை அமைச்சர்
பதவியில்
1966–1967
பிரதமர்இந்திரா காந்தி
கும்பகோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
1957–1967
பிரதமர்ஜவகர்லால் நேரு
லால் பகதூர் சாஸ்திரி
இந்திரா காந்தி
முன்னையவர்சி. ராமசாமி
பின்னவர்இரா. செழியன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 நவம்பர் 1906
பிரித்தானிய இந்தியா, மதராசு
இறப்பு19 சூன் 2001(2001-06-19) (அகவை 94)
தமிழ்நாடு, சென்னை
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சரஸ்வதி (1925-84; மரணம் வரை)
பிள்ளைகள்சகுந்தலா ஜெகநாதன்,
சீதா தியாகராஜன்,
லட்சுமி சுப்ரமண்யம்,
பத்மினி பாலகோபால்
தொழில்வழக்கறிஞர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

பட்டபிராமன் 1906 நவம்பர் 11 ஆம் நாள் சி. பி இராமசாமி ஐயர், சீதம்மா இணையருக்குப் பிறந்தார். இவர் பிறப்பதற்கு முன்பு இவரது தாயிக்கு இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. இதனால் சீதம்மா நாகா வழிபாட்டின் ஒரு பகுதியாக நாக பிரதிஸ்த யாகம் செய்தபின் பட்டாபிராமன் பிறந்ததால், பட்டாபிராமனுக்கு முதலில் நாகராஜன் என்று பெயரிடப்பட்டது. இவர் தன் தந்தையின் 27 வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு பிறந்தார்.

பட்டாபிராமன் மதராசின் மைலாப்பூரில் உள்ள பி. எஸ். மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். மேலும் மதராசின் பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இவர் இலண்டன் பொருளியல் பள்ளியில் எல். எல். பி. படிப்பை படித்தார். பின்னர் 1938 ஆம் ஆண்டு, தில்லியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தின் (தற்போதய இந்திய உச்ச நீதிமன்றம்) வழக்கறிஞரானார்,.

அரசியல்

தொகு

பட்டாபிராமன் தனது துவக்கக் காலத்திலிருந்தே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார். சைமன் குழு புறக்கணிப்பு, இந்தியா லீக் அமைப்பின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவர் 1957 [1] மற்றும் 1962 [2] ஆண்டுகளில் கும்பகோணம் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட்டாபிராமன் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் அமைச்சரவையில் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் திட்டமிடல் துறையில் துணை அமைச்சராக நியமிக்கபட்டார். மேலும் 1964 சூன் 15 முதல் 1966 சனவரி 24 வரை தகவல் மற்றும் ஒளிபரப்புது துறையின் துணை அமைச்சராக பணியாற்றினார். இவர் 1966 சனவரி 25 முதல் 1967 இல் பதவி விலகும் வரை சட்டம் மற்றும் நிறுவன விவகாரத் துறை அமைச்சராக பணியாற்றினார். பட்டபிராமன் 1967 தேர்தலில் கும்பகோணம் மக்களவைத் தொகுதியில் தோல்வியடைந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். [3]

விளையாட்டு

தொகு

பட்டபிராமன் ஒரு சிறந்த விளையாட்டு வீர்ரும், விளையாட்டுப் போட்டிகளின் புரவலரும் ஆவார். இவர் மைலாப்பூர் மனமகிழ் மன்றத்தை நிறுவினார். மேலும் பி. சுப்பராயனுடன் சேர்ந்து மதராசு துடுப்பாட்ட சங்கத்தை நிறுவினார்.

இறப்பு

தொகு

பட்டாபிராமன் 2001 சூன் 19 அன்று தனது 94 வயதில் தூக்கத்தில் இருந்தபோது இறந்தார்.

குடும்பம்

தொகு

பட்டாபிராமனின் தந்தை சர் சி. பி. இராமசாமி ஐயர் இந்தியாவின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தார். இவர் பிறந்த நேரத்தில், இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டிய வழக்கறிஞராகவும் இருந்தார். மதராசின் ஸ்டான்லி கல்லூரியின் முதல்வரும், பி. எஸ் உயர்நிலைப் பள்ளியின் நிறுவனருமான பென்னத்தூர் சுப்பிரமணிய அய்யரின் மருமகன் கேப்டன் டாக்டர் பி. கிருஷ்ணசாமியின் மகள் சரஸ்வதியை 1925 சனவரி 26 அன்று பட்டாபிராமன் மணந்தார். இந்தத் தம்பதிக்கு சகுந்தலா (1927-2000), சீதா (1933-1958), லட்சுமி, பத்மினி ஆகிய நான்கு மகள்கள் இருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Elections 1957 to the Second Lok Sabha" (PDF). Election Commission of India.
  2. "Statistical Report on General Elections 1962 to the Second Lok Sabha" (PDF). Election Commission of India.
  3. "Statistical Report on General Elections 1967 to the Second Lok Sabha" (PDF). Election Commission of India.

 

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._பட்டாபிராமன்&oldid=3920518" இலிருந்து மீள்விக்கப்பட்டது