சி. வி. ஆனந்த போசு

சி. வி. ஆனந்த போசு (C. V. Ananda Bose) மேற்கு வங்காளத்தின் கவர்னர் மற்றும் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நிர்வாக சேவையில் பணியாற்றிய முன்னாள் அரசு ஊழியர் ஆவார்.[1]

சி. வி. ஆனந்த போசு
22வது மேற்கு வங்காள ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 நவம்பர் 2022
முதலமைச்சர் மம்தா பானர்ஜி
முன்னவர் இல. கணேசன் (கூடுதல் பொறுப்பு)
தனிநபர் தகவல்
பிறப்பு 2 சனவரி 1951 (1951-01-02) (அகவை 72)
மன்னனம், கோட்டயம், கேரளா
குடியுரிமை இந்தியர்
தேசியம் இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்
தூய பெர்க்மான்சு கல்லூரி, சங்கணாச்சேரி
குரியாகோசு எலியாசு கல்லூரி, மன்னனாம்
விருதுகள் ஐக்கிய நாடுகளின் உலக சிறந்த நிர்வாகி விருது
சிங்கப்பூர் அரசின் நகர பசுமை மேலாண்மை விருது
ஜவர்கலால் நேரு ஆய்வு நிதி

ஆனந்த போசு தற்பொழுது மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.[2] இவர் அரசு ஊழியர், வீட்டு வசதி நிபுணர், எழுத்தாளர் மற்றும் பேச்சாளர், அரசாங்க செயலாளர் என பல பதவிகளை வகித்துள்ளார். இந்தியாவின் தலைமைச் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், கேபிடடு அலையன்சின் தலைவராக உள்ளார். ஐக்கிய நாடுகளின் வாழ்விடம் ஆளும் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கல்வி தொகு

போசு கேரள மாநிலம் கோட்டயத்தில் சனவரி 2, 1951ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிலானி, சங்கணாச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி கற்றுள்ளார்.

நிர்வாகப் பணி தொகு

1977-ல் இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தேர்வு செய்யப்பட்டு கேரள பிரிவினை சார்ந்தவர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வி._ஆனந்த_போசு&oldid=3605954" இருந்து மீள்விக்கப்பட்டது