சீக்கிய வரலாறு

சீக்கிய வரலாறு (History of Sikhism) சீக்கிய குருக்களில் பத்தாம் குருவான குரு கோவிந்த் சிங் இறப்பில் இருந்து தொடங்குகிறது. சீக்கிய குருக்களில் முதல் குரு குரு நானக் ஆவார். இவர் குரு நானக் தேவ் ஜி என அழைக்கப்படுகிறார். இவர் ஐந்தாம் நூற்றாண்டில் பஞ்சாபில் பிறந்தார்.

குரு கோவிந்த் சிங் ஜி இறந்த பிறகு சீக்கியச் சமய நடைமுறைகள் உருவாகின ('ஜி' முதுயோர், உயர்மதிப்பு வாய்ந்தோர், சமயக் குரவர் போன்றோருக்கு வழங்கும் மதிப்புப் பின்னொட்டாகும். இது கட்டாயமல்ல; குருவை அழைக்க, நாமே விரும்பித் தரும் மதிப்பு ஆகும்). எந்தவொரு குருவும் சமயம் உருவாக்க பிறப்பதில்லை. ஆனால் புனிதர்கள், குருக்கள், நெடுநோக்கினர் (தீர்க்கதரிசிகள்), இறையுணர்ந்தோர் பயிற்றுவிப்பு அல்லது போதனையில் இருந்தே சமயங்கள் தோன்றுகின்றன. 1699 மார்ச் 30 ஆம் நாள்[1] சீக்கிய சமயத்தில், பிந்தைய கோவிந் கூறுகிறபடி, ஐந்து பல்வேறு சமூகப் பிரிவுகளில் இருந்து புனித நீராட்டப்பட்டு கால்சாவில் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. முதல் ஐந்து புனிதர்கள் (தூயவர்கள்), பின்னர் குரு கோவிந்த் சிங் ஜி அவர்களைக் கால்சாவில் புனித நீராட்டிச் சேர்த்தனர்.[2]இது கால்சா மரபையும் அதன் ஏறத்தாழ 300 ஆண்டு வரலாற்றையும் குறிக்கிறது.

சீக்கிய வரலாறு பஞ்சாபின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததாகும். இது 16 ஆம் நூற்றாண்டு தெற்காசிய வடமேற்குப் பகுதி (பாக்கித்தான், இந்தியப் பகுதி) அரசியல் சூழலில் தோன்றியது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் முகலாயரே இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டனர். இசுலாமிய ஆட்சியினர் இசுலாம், இந்து எனும் இருசமயங்களின் புனிதர்களை அல்லது துறவிகளையுமே போற்றினர். ஆனால் வட இந்திய சீக்கியர் அடக்கப்படவே, சீக்கிய குரு தலையிட நேர்ந்துள்ளது. மக்களை இசுலாம் சமயத்தில் சேர்க்க முயன்ற இசுலாமிய அரசர்கள் சீக்கியக் குருக்களைக் கொல்ல நேர்ந்துள்ளது[3] சீக்கியர்களையும் இந்துக்களையும் கொல்வதைத் தடுக்க,[4] அதற்குப் பிறகு சீக்கிய சமுதாயம் படையொடு கிளர்ந்து முகலாய ஆதிக்கத்தை எதிர்த்தது. மிசீக்களாலும் மாமன்னர் இரஞ்சித் தலைமையில் அமைந்த சீக்கியப் பேரரசும் இணைந்து கண்ட சீக்கியக் கூட்டமைப்பின் தோற்றம், சமயப் பொறையும் சமயப் பன்முகப் போக்குகளையும் போற்றி கிறித்தவர்களையும் முசுலிம்களையும் இந்துக்களையும் அதிகார அடுக்கில் சேர்த்துக்கொண்டது. சீக்கியப் பேரரசின் தோற்றமே அரசியல் அளவில் சீக்கியம் தோன்ற வழிவகுத்துள்ளது எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.[5] இக்கால கட்டத்தில் சீக்கியப் பேரரசில் காசுமீர், இலடாக், பெழ்சுவார் ஆகிய பகுதிகள் அடங்கி இருந்தன. சீக்கிய படையின் முதன்மைத் தளபதியான அரி சிங் நால்வால் வட மேற்கு முகப்பில் கைபர் கணவாய் வரை சீக்கியப் பேரரசை விரிவடையச் செய்துள்ளார். இதன் சமயஞ்சாராத கொள்கை கொண்ட ஆட்சியினர் படை, பொருளியல், அரசமைவுகளில் புதுமை வாய்ந்த சீர்திருத்தங்களைத் திறம்பட செய்துள்ளது.

இந்தியாவும் பஞ்சாபும் 1947 இல் பிரிந்ததும் சீக்கியர்களுக்கும் முசுலிம்களுக்கும் போராட்டம் நிகழ, முசுலிம்கள் கிழக்கு பஞ்சாபில் (இந்தியப் பஞ்சாபில்) இருந்து மேற்கு பஞ்சாபுக்கும் (பாக்கித்தானிப் பஞ்சாபுக்கும்) அதேபோல சீக்கியர்கள் மேற்கு பஞ்சாபில் (பாக்கித்தானிப் பஞ்சாபில்) இருந்து கிழக்கு பஞ்சாபுக்கும் (இந்தியப் பஞ்சாபுக்கும்) இடம்பெயர்ந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "BBC History of Sikhism – The Khalsa". Sikh world history. BBC Religion & Ethics. 29 August 2003. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  2. Singh, Patwant (2000). The Sikhs. Knopf. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-375-40728-6. https://archive.org/details/sikhs0000sing_u5q4. 
  3. Pashaura Singh (2005), Understanding the Martyrdom of Guru Arjan, Journal of Punjab Studies, 12(1), pages 29-62
  4. McLeod, Hew (1987). "Sikhs and Muslims in the Punjab". South Asia: Journal of South Asian Studies 22 (s1): 155–165. doi:10.1080/00856408708723379. 
  5. Lafont, Jean-Marie (16 May 2002). Maharaja Ranjit Singh: Lord of the Five Rivers (French Sources of Indian History Sources). USA: Oxford University Press. பக். 23–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-566111-7. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
History of Sikhism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கிய_வரலாறு&oldid=3582648" இலிருந்து மீள்விக்கப்பட்டது