சீசியம் பாசுபைடு

வேதிச் சேர்மம்

சீசியம் பாசுபைடு (Caesium phosphide) என்பது Cs2P5. என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] சீசியம், பாசுபரசு, ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

சீசியம் பாசுபைடு
Caesium phosphide
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cs].[Cs].[P].[P].[P].[P].[P]
பண்புகள்
Cs2P5
வாய்ப்பாட்டு எடை 420.68 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

வெற்றிடத்தில் தனிம பாசுபரசையும் சீசியத்தையும் சுடுகலனில் சூடுபடுத்துவதால் சீசியம் பாசுபைடு உருவாகும்.:[2]

2Cs + 5P -> Cs2P5

இதேபோல உருகியநிலை பாசுபரசை சீசியம் ஐதரைடுடன் வினைபுரியச் செய்தாலும் சீசியம் பாசுபைடு உருவாகும்.

2CsH + 5P -> Cs2P5 + H2

இயற்பியல் பண்புகள்

தொகு

சீசியம் பாசுபைடு நாற்கோண கட்டமைப்புடன் P41 என்ற இடக்குழுவில் மஞ்சள் நிறப் படிகங்களை உருவாக்குகிறது.[3] இது 300 ° செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பமடையும் போது பழுப்பு நிறமாகவும், திரவ நைட்ரசனுடன் சேர்த்து குளிர்விக்கும்போது நிறமற்றதாகவும் மாறும்.

மந்த வாயு வளிமண்டல சூழலில் 650 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பமடையும் போது சிதைவடையும்.

திரவ அமோனியாவில் சீசியம் பாசுபைடு கரையும்.

வேதியியல் பண்புகள்

தொகு

தண்ணீருடன் வினைபுரியும்போது பாசுபீனையும் ஐதரசனையும் விடுவிக்கிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Zayas, Hilda (1 December 2011). Spanish Chemical and Pharmaceutical Glossary: English-Spanish, Spanish-English (in ஆங்கிலம்). Taylor Trade Publications. p. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58979-721-5. பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
  2. Samsonov, Gregory V. (6 December 2012). Handbook of the Physicochemical Properties of the Elements (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 781. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-6066-7. பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
  3. Tilley, Richard J. D. (14 August 2006). Crystals and Crystal Structures (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-02953-4. பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
  4. Bond, John (31 January 2017). Sources of Ignition: Flammability Characteristics of Chemicals and Products (in ஆங்கிலம்). Elsevier. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-6125-9. பார்க்கப்பட்ட நாள் 3 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_பாசுபைடு&oldid=3902929" இலிருந்து மீள்விக்கப்பட்டது