சீசியம் ஐதரைடு

சீசியம் ஐதரைடு (Caesium hydride) CsH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்தக் கார உலோக ஐதரைடு சீசியமும் ஐதரசனும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகிறது [2]. உலோக ஆவியில் ஒளி-தூண்டல் துகள் உருவாக்கத்தால் தயாரிக்கப்பட்ட முதலாவது பொருள் சீசியம் ஐதரைடு ஆகும். சீசியத்தைப் பயன்படுத்தி அயனி உந்துவிசை அமைப்பு செயல்படுத்துவது தொடர்பான ஆரம்பகால ஆய்வுகளில் சீசியம் ஐதரைடு பெரிதும் பயன்பட்டது.

சீசியம் ஐதரைடு
Caesium hydride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் ஐதரைடு
வேறு பெயர்கள்
சீசியம் ஐதரைடு
இனங்காட்டிகள்
13772-47-9 N
ChemSpider 122830 Y
InChI
  • InChI=1S/Cs.H/q+1;-1 Y
    Key: HXCOCQWMKNUQSA-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/Cs.H/q+1;-1
    Key: HXCOCQWMKNUQSA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139281
  • [H-].[Cs+]
பண்புகள்
CsH
வாய்ப்பாட்டு எடை 133.91339 கி/மோல்
தோற்றம் வெண்மை அல்லது நிறமற்ற படிகங்கள் அல்லது தூள்[1]
அடர்த்தி 3.42 கி/செ.மீ3[1]
உருகுநிலை ~170 °செ (சிதைவடையும்)[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுர படிகத் திட்டம்
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் CsF, CsCl, CsBr, CsI
ஏனைய நேர் மின்அயனிகள் LiH, NaH, KH, RbH,
மற்றும் இதர ஐதரைடுகள்]]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சீசியம் ஐதரைடில் உள்ள சிசியம் அணுக்கருவை, சுழற்சி-பரிமாற்ற ஒளியியக்க ஏற்றல் செயல்முறையின் வழியாக ஏற்றப்பட்ட ஒளியியக்க சீசிய ஆவியுடன் இடைவினை புரியச் செய்தால் அதை மிகை முனைவாக்கம் செய்யலாம். சுழற்சி-பரிமாற்ற ஒளியியக்க ஏற்றல் செயல்முறை சீசியம் அணுக்கருவின் அணுக்கருக்களின் காந்த ஒத்ததிர்வு சமிக்ஞையை அதிகரிக்கச் செய்யும் [3].

படிகக் கட்டமைப்பு

தொகு

அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சீசியம் ஐதரைடு சோடியம் குளோரைடின் கட்டமைப்பையே ஒத்திருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. p. 4.57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0486-5.
  2. Tam, A.; Moe, G.; Happer, W. (1975). "Particle Formation by Resonant Laser Light in Alkali-Metal Vapor". Phys. Rev. Lett. 35 (24): 1630–33. doi:10.1103/PhysRevLett.35.1630. Bibcode: 1975PhRvL..35.1630T. 
  3. Ishikawa, K.; Patton, B.; Jau, Y.-Y.; Happer, W. (2007). "Spin Transfer from an Optically Pumped Alkali Vapor to a Solid". Phys. Rev. Lett. 98 (18): 183004. doi:10.1103/PhysRevLett.98.183004. பப்மெட்:17501572. Bibcode: 2007PhRvL..98r3004I. https://zenodo.org/record/1059117. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_ஐதரைடு&oldid=4154895" இலிருந்து மீள்விக்கப்பட்டது