சோடியம் ஐதரைடு

சோடியம் ஐதரைடு (Sodium hydride) வேதி பொருளாகும்

சோடியம் ஐதரைடு (Sodium hydride) NaH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் இன்றளவும் கரிமத் தொகுப்பு முறைகளில் ஒரு வலிமயைான எரியக்கூடிய காரமாக முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. NaH இது உப்புத்தன்மையுள்ள ஐதரைடுகளின் பிரதிநிதியாக உள்ளது. இச்சேர்மமானது Na+ மற்றும் H அயனிகளரால் ஆனது. போரேன், மீத்தேன், அம்மோனியா மற்றும் நீர் போன்ற ஐதரைடுகள் மூலக்கூறு நிலை ஐதரைடுகளாக இருக்கும் போது, இச்சேர்மம் மட்டும் வேறுபட்டு அயனி நிலை ஐதரைடாக உள்ளது. இச்சேர்மமானது அயனிப்பண்பைக் கொண்டிருப்பதால் கரிமக் கரைப்பான்களில் கரைவதில்லை. (உருகிய சோடியத்தில் கரையும்) சோடியம் ஐதரைடின் கரையாத தன்மையின் காரணமாக சோடியம் ஐதரைடை உள்ளடக்கிய அனைனத்து வினைகளும் திண்மத்தின் புறப்பரப்பில் நிகழ்பவையாகவே உள்ளன.

சோடியம் ஐதரைடு
சோடியம் ஐதரைடு
Sodium-hydride-3D-vdW.png
இனங்காட்டிகள்
7646-69-7 Yes check.svgY
ChemSpider 23144 Yes check.svgY
EC number 231-587-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24758
பண்புகள்
NaH
வாய்ப்பாட்டு எடை 23.998 கி/மோல்[1]
தோற்றம் வெண்ணிற அல்லது சாம்பல் நிறத் திண்மம்
அடர்த்தி 1.39 கி/செமீ3[1]
உருகுநிலை
நீருடன் வினைபுரிகிறது[1]
கரைதிறன் அம்மோனியா, பென்சீன், CCl4, CS2 ஆகியவற்றில் கரைவதில்லை.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.470
கட்டமைப்பு
படிக அமைப்பு கன சதுரம் அமைப்பு (NaCl), cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
Lattice constant a = 498 பிகோமீட்டர்
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகி (Na+)
எண்முகி (H)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−56.3 கிலோ யூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
40.0 யூல்·மோல்−1·K−1
வெப்பக் கொண்மை, C 36.4 யூல்/மோல் கெல்வின்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அதிக அரிப்புத்தன்மை உடையது, காற்றில் தீப்பற்றும் தன்மை உடையது, நீருடன் தீவிரமாக வினைபுரிகிறது
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms Water-react. 1
GHS signal word அபாயம்
H260
தீப்பற்றும் வெப்பநிலை எரியக்கூடியது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் போராோஐதரைடு
சோடியம் ஐதராக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் ஐதரைடு
பொட்டாசியம் ஐதரைடு
ருபீடியம் ஐதரைடு
சீசியம் ஐதரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

காரப்பண்பும் மற்றும் அமைப்பும்தொகு

சோடியம் ஐதரைடானது திரவ சோடியம் மற்றும் ஐதரசனின் நேரடியான வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது. [3] தூய்மையான NaH ஆனது நிறமற்றதாகும். இருப்பினும் சில மாதிரிகள் பொதுவாக சாம்பல் நிறத்தில் தோன்றுகின்றன.

சோடியம் ஐதரைடானது, இலித்தியம் ஐதரைடு, KH, RbH, மற்றும் CsH, போன்றவற்றைப் போன்று சோடியம் குளோரைடின் படிக அமைப்பினைக் கொண்டுள்ளது. இந்த படிக அமைப்பில், எண்முகி மூலக்கூறு வடிவத்தில் ஒவ்வொரு Na+ அயனியானது ஆறு H அயனிகளால் சூழப்பட்டுள்ளது. H அயனியின் அயனி ஆரமானது (146 பிகோமீட்டர் NaH) மற்றும் F (133 பிகோமீட்டர்) ஆகியவை Na−H மற்றும் Na−F பிணைப்புத் தொலைவுகளால் மதிப்பிட்டவாறு ஒப்பிடத்தகுந்தவை ஆகும். [4]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Haynes, p. 4.90
  2. "New Environment Inc. – NFPA Chemicals". மூல முகவரியிலிருந்து 2016-08-27 அன்று பரணிடப்பட்டது.
  3. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.
  4. Wells, A.F. (1984). Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_ஐதரைடு&oldid=2932310" இருந்து மீள்விக்கப்பட்டது