உருபீடியம் ஐதரைடு
(ருபீடியம் ஐதரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ருபீடியம் ஐதரைடு (Rubidium hydride) என்பது RbH. என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ருபீடியத்தின் ஐதரைடு சேர்மம் ஆகும். ருபீடியம் உலோகத்தை ஐதரசன் வாயுவுடன் வினைபுரியச் செய்வதன் மூலம் ருபீடியம் ஐதரைடை தொகுப்பு முறையில் தயாரிக்கலாம். ஒரு காரவுலோகத்தின் ஐதரைடு என்ற முறையில் இச்சேர்மம் வலிமையற்ற ஆக்சிசனேற்றிகளுடன் அதி தீவிரமாக வினைபுரியும் தன்மை பெற்றுள்ளது. குளோரின் அல்லது புளோரின் உடன் ஏற்ற இறக்க வினையில் பங்கேற்று அதிகமான வெப்பத்தை வெளிவிடுகிறது. ருபீடியம் ஐதரைடு, தண்ணீர் மற்றும் காற்றுடன் அதிக நாட்டம் கொண்டு தீவிரமாக வினைபுரியும் என்பதால் இதை பத்திரமாக பாதுகாப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் ஐதரைடு
| |
வேறு பெயர்கள்
ருபீடியம் (I) ஐதரைடு
| |
இனங்காட்டிகள் | |
13446-75-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 171411 |
| |
பண்புகள் | |
RbH | |
வாய்ப்பாட்டு எடை | 86.476 கி/மோல் |
தோற்றம் | வெண்மை கனசதுரம் படிகங்கள் |
அடர்த்தி | 2.60 கி/செ.மீ3 |
உருகுநிலை | 170°செ இல் சிதைவடையும் |
வினைபுரியும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-52.3 கியூ/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ருபீடியம் ஆக்சைடு ருபீடியம் குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் ஐதரைடு சோடியம் ஐதரைடு பொட்டாசியம் ஐதரைடு சீசியம் ஐதரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–79, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
.