சீசியம் புரோமைடு
சீசியம் புரோமைடு (Caesium bromide) என்பது CsBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சீசியமும் புரோமினும் சேர்ந்த வேதிச் சேர்மம் ஆகும். சீசியம் குளோரைடு வகை கனசதுர அமைப்பை ஒத்த எளிய கனசதுர படிக அமைப்பை சீசியம் புரோமைடு பெற்றிருக்கிறது. இவ்வமைப்பு Pm3m இடக்குழு வகையையும் அணிக்கோவை மதிப்பு a = 0.42953 நா.மீ. Cs+ மற்றும் Br− அயனிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 0.37198 நா.மீ ஆகும். எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்பட்டால் இதனுடைய கொல்லும் அளவு 1400 மி.கி/ கி.கி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் புரோமைடு
| |
வேறு பெயர்கள்
சீசியம் புரோமைடு,
சீசியம்(I) புரோமைடு | |
இனங்காட்டிகள் | |
7787-69-1 | |
ChemSpider | 22994 |
EC number | 232-130-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24592 |
| |
பண்புகள் | |
CsBr | |
வாய்ப்பாட்டு எடை | 212.81 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திடப்பொருள் |
அடர்த்தி | 4.44 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 636 °C (1,177 °F; 909 K) |
கொதிநிலை | 1,300 °C (2,370 °F; 1,570 K) |
1062 கி/லி (15 °செ) 1243 கி/லி (25 °செ) | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | CsCl |
ஒருங்கிணைவு வடிவியல் |
8–8 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது. |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1400 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீசியம் புளோரைடு சீசியம் குளோரைடு சீசியம் அயோடைடு சீசியம் அசுட்டாடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் புரோமைடு பொட்டாசியம் புரோமைடு ருபீடியம் புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்பு முறையில் தயாரிப்பு
தொகுபின்வரும் வேதி வினைகள் வழியாக சீசியம் புரோமைடைத் தயாரிக்கலாம்.
நடுநிலையாக்கல் வினை
தொகுCsOH (நீர்த்த) + HBr (நீர்த்த) → CsBr (நீர்த்த) + H2O (நீர்மம்) Cs2(CO3) (நீர்த்த) + 2 HBr (நீர்த்த) → 2 CsBr (நீர்த்த) + H2O (நீர்மம்) + CO2 (வாயு)
• நேரடித் தொகுப்பு வினை:
2 Cs (திண்மம்) + Br2 (வாயு) → 2 CsBr (திண்மம்)
சீசியம் உலோகம், உப்பீனிகளுடன் நேரடியாக வினைபுரியும் போது அதி தீவிரமாக வினைபுரிகிறது என்பதாலும் அதிக விலைமதிப்பு கொண்டது என்பதாலும் பெரும்பாலும் இம்முறையில் சீசியம் புரோமைடு தயாரிக்கப்படுவதில்லை.
பயன்கள்
தொகுஒளியியலில் சில சமயங்களில் நிறமாலை ஒளியளவியில், ஒளிக்கற்றைப் பிரிப்பானாக சீசியம் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகுஇவற்றையும் காணக
தொகுவெளி இணைப்புகள்
தொகு- MSDS at Oxford University பரணிடப்பட்டது 2007-10-17 at the வந்தவழி இயந்திரம்
- Caesium bromide at webelements.com
- IR transmission spectrum பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்