சீனம் தமிழ் மொழிபெயர்ப்புக் கையேடு (தொடக்க வரைபு)

சீனா உலகின் மிகத் தொன்மையான தொடர்ச்சியான நாகரீகத்தையும் மொழியையும் உடைய தேசம் ஆகும். உலகின் ஐந்தில் ஒரு பகுதியினர் சீனாவில் வசிக்கின்றனர் (~1.3 பில்லியன்), சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர். காகிதம், compass, வெடிமருந்து, நூல் பதிப்பு நுட்பம் உட்பட பல்வேறு நுட்ப கண்டுபிடுப்புகளை சீனா உலகத்துக்கு தந்துள்ளது. இன்று சீனா உலகில் ஒரு வல்லரசாக பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது. சீனாவை, சீன மக்களை, சீன மொழியை, பண்பாட்டை, தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வது இன்றைய உலகமயமாதல் சூழலில் அவசியமாகிறது.


மேற்குலகு, இஸ்லாமிய நாகரிகம், தொற்காசியா ஆகியவற்றுடன் தமிழர்கள் நீண்ட காலமாக விரிவான தொடர்புகளையும் புரிதல்களையும் கொண்டவர்கள். ஆபிரிக்கா, உருசியா ஆகியவற்றுடனான தொடர்பும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழருக்கும் சீனருக்குமான தொடர்பு அவ்வளவு விரிபானது இல்லை. மலேசியா, சிங்கப்பூர் போன்ற சீனர்கள் பெருந் தொகையில் வாழும் நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும், தமிழருக்கும் சீன நாகரித்துக்குமான தொடர்பு விரிவாக தமிழில் ஆவணப்படுத்தப்பட வில்லை. உருசிய மொழியிலுருந்து தமிழுக்கு வந்த படைப்புகளுடன் ஒப்புடுகையில் சீனத்தில் இருந்து தமிழுக்கு வந்த படைப்புகள் மிகக் குறைவு. உலகமயமாதல் சூழல் இந்த நிலையைச் சற்று மாற்றி வருகின்றது எனலாம். எடுத்துக்காட்டாக சீன வானொலி நிலையம் (தமிழ்) மூலமாக சீன மக்களே தமிழ் மக்களுடன் புரிந்துணர்வை மேம்படுத்த முனைகிறார்கள்.


தமிழ் விக்கிப்பீடியா பல்வேறு துறைகள் சார் தகவல்களை தொகுத்து தர விழைகிறது. அதன் நீட்சியாக சீனா தொடர்பானா பல்வேறு தகவல்களையும் இது தொகுக்கிறது. இந்த செயற்பாட்டில் இப்போதைக்கு எமது தகவல்களை ஆங்கிலம் மூலமாகவே பெறுகிறோம். இருப்பினும் பெயர்களை, சில கருத்துக்களை சீன மூலத்தில் இருந்து இயன்றவரை அப்படியே பெறுவதுவே தகும். குறிப்பாக சீனப் பெயர்களை தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது ஆங்கில ஒலிப்பியல் முறையில் அல்லது வழக்கத்தில் இருந்து எடுத்தாளாமல் சீன மூலத்தில் இருந்து எடுத்தாளுவதே சிறப்பு. அதை சீரிய முறையில் ஒழுங்கமைக்க நாம் எமக்கு சில வழிகாட்டல்களை உருவாக்குவது அவசியமாகிறது. அதன் முதற்கட்டத்தைத் தொகுக்க இந்த பக்கம் பயன்படும்.

மொழிபெயர்ப்பு உதவி தேவை

தொகு

இவற்றையும் பாக்க

தொகு