சீனாவின் வன விலங்குகள்

சீனாவின் காட்டு விலங்குகள்

The giant panda is endemic to China, where it is an endangered and protected species.

சீனாவின் பரந்து விரிந்த நிலப்பகுதி பலவகை காட்டு விலங்குகள் வாழ்வதற்கு உதவிகரமாக உள்ளது. உலகத்தில் மிகப்பெரிய நிலப்பரப்புக் கொண்ட 17 நாடுகளில் சீனாவும் ஒன்று.கணக்கெடுப்பின்படி சீனாவில் 7516 வகையான முதுகெலும்புள்ள விலங்குகள் உள்ளன.அவற்றில் 4936 மீன் வகைகள்,1269 பறவை வகைகள்,562 பாலூட்டிகள்,403 ஊர்வன,346 நிலநீர்வாழ் உயிரிகள் ஆகியவை அடங்கும்.அதிக உயிரினங்கள் வாழும் நாடுகளுள்,பாலூட்டிகளில் சீனா உலகில் மூன்றாவது இடத்தையும்,பறவைகளில் எட்டாவது இடத்தையும்,ஊர்வனவற்றில் ஏழாவது இடத்தையும்,நிலநீர்வாழ் உயிரினங்களில் ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளது.ஒவ்வொரு வகையிலும்,சீனா மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்புக் கொண்ட நாடாக திகழ்கிறது.

சீனாவில் இருக்கக்கூடிய பெரும்பாலான உயிரினங்கள் நோய்வாய்படும் சூழலில் உள்ளது.சீனாவின் மிகப்பிரபலமான விலங்கான பான்டா கரடியும் இவ்வகையில் சேரும்.இவ்வகைக் கரடிகள் அழிந்து வரும் விலங்கினங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.ஆறில் ஒருபங்கு பாலூட்டிகளும்,மூன்றில் இரண்டுபங்கு நீர்நிலவாழ் உயிரினங்களும் சீனாவில் நோய்வாய்ப்படும் ஆபத்தான நிலையில் உள்ளன.இங்கு வாழும் வனவிலங்குகள்,மனிதர்கள் வாழும் இடத்திலும் வாழ்வதால்,அவர்களால் இவ்விலங்கினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.சீனாவில் குறைந்தபட்சம் 840 உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன.இவை அனைத்தும், காடுகளை அழிப்பதனால்,மாசுபடுதலால்,உணவிற்காக மற்றும் மருத்துவ பயன்களுக்காக அழிக்கப்படுகின்றன.2005-சட்டப்படி,அழிந்துவரும் விலங்கினங்கள் காக்கப்படுகின்றன.சீனாவில் 2349 இயற்கை வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.இச்சரணாலயங்கள் 578,960 சதுர கி மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும்,இது சீனாவின் 15 சதவீத நிலப்பகுதியை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

அழியும்நிலையில் உள்ள உயிரினங்கள் தொகு

மேலும் பார்க்க தொகு

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

வார்ப்புரு:China topics


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவின்_வன_விலங்குகள்&oldid=3686943" இலிருந்து மீள்விக்கப்பட்டது