சீனாவில் இந்தியர்கள்

சீனாவில் இந்தியர் என்பவர்கள் இந்தியாவில் இருந்து மக்கள் சீனக் குடியரசுக்குக் குடிபெயர்ந்தவர்கள். இவர்களின் வம்சாவழியினரும் அந்தக் குடிபெயர்ப்பில் அடங்குவர். இவர்களில் பெரும்பான்மையானோர் ஹாங்காங்கிலும், ஏனையோர் சீனாவின் மற்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்கள் குடியேறிய காலத்தின் போது இந்திய கலாச்சாரம் சீன கலாச்சாரத்திலும் வரலாற்றிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின.

சீனாவில் இந்தியர்கள்
Indians in China
"印度人在中国"
போதிதர்மர் • துவார்கநாத் கோட்னிசு
மொத்த மக்கள்தொகை
(சீனப் பெரும்பரப்பு: 15,051 (2010)[1]
ஹாங்காங்: 20,444)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பெய்ஜிங் · ஹாங்காங் · மக்காவ்
மொழி(கள்)
கெண்டனீஸ்
மாண்டரின்
ஆங்கிலம்
இந்திய மொழிகள்
சமயங்கள்
இந்து சமயம்
புத்தம்
இஸ்லாம்
சமணம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சிந்தியர்
சீனாவில் பாகிஸ்தானியர்

வரலாறு தொகு

இடைக்காலம் தொகு

வரலாற்று ஆசிரியர்களின் பதிவேடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற ஆவணங்களில் கி.மு. 113 ஆம் ஆண்டில் வாழ்ந்த சாங் கியான் (Zhang Qian) என்பவரும், கி.மு. 145 க்கும் - 90 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சிமா கியான் (Sima Qian) மேற்கோள் காட்டப்பட்டு உள்ளனர்.

”செந்து’’ (Shendu) என்று மேற்கோள்களும் உள்ளன. பாகிஸ்தான் சிந்து மாநிலத்தில் அமைந்து இருக்கும் ’இந்து’ பள்ளத்தாக்காக இந்தச் ‘செந்து’வாக இருக்கலாம் என்றும் அந்தப் பதிவேடுகள் ஆருடம் காட்டுகின்றன்.

சிந்து, செந்து என்று எல்லாம் சொல்லப் படுகின்ற இந்தச் சொல் தொடர் சமஸ்கிருதச் சொல்லான ’சிந்து’ எனும் சொல்லின் மூலமானது. முதலாம் நூற்றாண்டில் ஹான் பேரரசு யுனான் மாநிலத்தைக் கைப்பற்றிய போது, சீன அதிகாரக அறிக்கை, இந்திய “செந்து” சமுதாயம் வாழ்வதாக அறிவிக்கின்றது.

மகா தியான போகி தர்மர் தொகு

முதலாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து புத்த மதம் சீனாவிற்குப் பரவியது. பின்னர், இந்திய அறிஞர்கள், கல்விமான்கள், புத்த பிக்குகள் பலர், சீனாவிற்கு நெடுநடை மேற்கொண்டனர். அவர்களில் ஷாலின் (Shonlin) துறவிமடம் அமைத்த மகா தியான யோகி புத்தப் பத்திரரும் ஆவார்.

சான் சென் (Chan Zen) எனும் மகா தியானப் புத்தர் மடத்தைத் தோற்றுவித்த போதிதர்மரும் அவர்களில் ஒருவர். இக்கால கட்டம் ஏறக்குறைய கி.பி. 464 – 495 ஆம் ஆண்டுகளில் இடைப் பட்ட காலமாகும்

காலனித்துவ காலம் தொகு

இந்தியர்களும் மற்றவர்களைப் போல் போர்த்துக்கீசிய காலனித்துவ ஆட்சியில் கடலோடிகளாக 16 ஆம் நூற்றாண்டில் சீன கடற்கரையோரத்தில் வாணிபம் தொடங்கினர்.சில புறம்பான செயலினால் சட்டம் செயல்பட தொடங்கின. எடுத்துக்காட்டுக்கு, போர்த்துக்கீசிய கடத்தல்காரர்களில் ஒருவரான கலியோத் பெரேரா, (Galiote Pereira) 1549 இல் புஜியன் கடற்கரை ரோந்து காவலரால் கைது செய்யப்பட்டு குவாங்சிற்கு (Guangxi) நாடு கடத்தப்பட்டான். இவனுடன் குஜாரத்தி வேலைக்காரனும் நாடு கடத்தப் பட்டான்.

இதே காலகட்டத்தில் முன்னால் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவை காலனித்துவ ஆட்சியில் ஆண்டபோது அங்கிருந்த இந்தியர்களில் கோவா மக்கள் சிறு எண்ணிக்கையில் மக்காவுக்கு குடியேறினர்.

1841 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 26 ஆம் நாள் யுனைடெட் கிண்டத்தின் ஒன்றியக் கொடி ஏற்றப் பட்டது. இந்நிகழ்வில் இந்திய படையினர் 2,700 பேர் பங்கெடுத்துக் கொண்டனர்.

அவர்கள் தொடக்கக் காலகட்டத்தில் ஹாங் காங் மேம் பாட்டிற்கு முக்கிய பங்காக செயல்பட்டிருந்தனர். சிறப்பாக குறிப்பிடும் வகையில் ஹாங் காங் பல்கலைக் கழகத்தையும் ஹாங் காங் சங்காய் பொருளகத்தையும் நிறுவ பங்கெடுத்துக் கொண்டனர். இதில் இந்தியர்களினால் 1888 இல் நிறுவப் பட்ட ஸ்டார் ஃபேரியும் அடங்கும்.

1952 இல் இந்திய சமுதாய தொழில் முனைவர்கள், ஹாங் காங் வாணிகக் கழகத்தை தோற்றுவித்தனர். இதன் நோக்கம் தென் சீனாவிலும் ஹாங் காங்கிலும் இந்திய வாணிகத்தின் மதிப்பை மேம்படுத்தவும் உறுதிப் படுத்தவும் குறிக்கோள் கொண்டுள்ளனர்.

ஹாங் காங் தொகு

இந்தியர்கள் அதிகமாக பல துறைகளில் கால்பதித்தனர். அதில் குறிப்பிடும் வகையில் அனைத்துலக நிறுவனம், பொருளகம், விமான சேவை, பயண நிறுவனம், மருத்துவம், ஊடம், காப்புறுதி இவற்றுடன் மேலும் நிதி நிறுவனம், பொருளகம் போன்ற துறைகளில் இந்திய தொழில் நெறிஞர்கள் வருகை அதிகமாக இருந்தது.

தொடர்ந்து தகவல் தொழில் நுட்பம், தொடர்பு துறை ஆகியவற்றில் தகுதிப் பெற்ற இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டினர். 1950 இல் தையற்துறை இந்தியர்களிடையே மிக பிரபலமாக இருந்ததை தொடர்ந்து, அவர்கள் 200 கடைகளுக்கு உரிமையாளர்களாயினர்.

இந்திய கலாச்சாரம் தொகு

சீனாவில் இந்திய தூதரகம் ஆண்டு முழுவதும் இந்திய கலாச்சார விழாவை நடத்துகின்றன. அதில் முக்கிய விழாவாக இந்திய பாரம்பரிய உணவு வகையினை இந்திய உணவகங்களில் ஏற்பாடு செய்கின்றனர். இவ்விழா விரிவாக்கம் நாற்பத்தைந்து சீன நகரில் சிறகினை விரித்திருக்கின்றது.

மேலும் இந்திய கலாச்சாரமான ஆடை அலங்கார கண்காட்சிகளும் சீன இளைஞர்களிடையே ஆர்வமும் பிரபலமும் உண்டாகியது. அதன் தாக்கத்தின் காரணமாக இந்திய நாகரீகத்தின் மொழி, கலைக் கலாச்சாரம், சமயம் ஆகியவற்றை அறியும் பொருட்டு சீன பல்கலைக் கழகங்களில் ஆய்வு நடைபெறுகிறது.

சீன அரசாங்கம் அக்சர்தம் திருக்கோயில் கட்டுமானம் எழுப்புவதற்கு நொய்டாவிலும் கண்டிகாரிலும் அமைந்திருக்கும் அக்சர்தம் திருக்கோயிலை நடத்திவரும் சுவாமிநாராயணன் அறக்கட்டளையை அழைத்திருக்கின்றது.

இக்கோயிலுக்கான நிலத்தையும் சீன குவாங்டோங் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் வழிபாட்டுடன் கூடிய இந்திய கலைக்கலாச்சாரம், பன்மொழி, பன்னிசை கற்றுக் கொடுக்கும் கலைக் கூடமாக இருப்பது அரசாங்கத்தின் திட்டமாகும்.

சீனப் பெருநிலம் தொகு

சீன மக்கள் குடியரசு, ஆறாவது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010 ஆம் ஆண்டு வரையில் சீனாவில் இந்தியர்களின் எண்ணிக்கை 15,051 ஆக இருக்கிறதென்று அவ்வறிக்கை கூறியது.

இவ்வெண்ணிககை ஏற்கனவே இருந்த மற்ற மூல ஆதாரப்படி ஏறுமுகமாக ஏறக்குறைய 25,000 ஆக இருக்கிறதென்றும் இவர்களில் பெரும்பான்மையோர் மாணவர்கள், வணிகர்கள், தொழில் திறன் வாய்ந்தவர்கள், இந்தியர்கள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பொருளகம் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். மேலும் சமுதாய நலன் கருதி இங்கு மூன்று இயக்கங்கள் இயங்குகின்றன.

1992 இல் இந்திய சீன இருவழி வாணிகத்தில் 338.5 ந்து மில்லியன் அமெரிக்க டாலராக பொருளாதாரம் இருந்தது. 2002 இல் இவ்வெண்ணிக்கை 15 மடங்காக அதிகரித்து 4945.9 பது மில்லியன் அமெரிக்க டாலராக உயர்வுக்கண்டது.

சீனாவில் 50 கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் கால்பதித்தது. இந்நிறுவனத்தின் பணியாளர்கள் களைப்பாறுவதற்கு சங்காயில் அமந்திருக்கும் ‘இந்திய மன மகிழ் மன்றத்தில்’ ஒன்று கூடுவதுண்டு. மேலும் பொருளகங்களான இந்திய ஸ்டேட் பேங், ஐசிஐசிஐ பேங், பேங் ஆஃப் இந்தியா, பேங் ஆஃப் பரோடா ஆகிய பொருளகங்களும் செயல்பட தொடங்கிவிட்டன.

சீன பெருநிலத்தில் இந்தியகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் 2,000 இம் பேர் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Major Figures on Residents from Hong Kong, Macao and Taiwan and Foreigners Covered by 2010 Population Census". National Bureau of Statistics of China. April 29, 2011. Archived from the original on மே 14, 2011. பார்க்கப்பட்ட நாள் May 3, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_இந்தியர்கள்&oldid=3554846" இலிருந்து மீள்விக்கப்பட்டது