சீனாவில் இன்ப உலா (நூல்)

சீனாவில் இன்ப உலா எனும் இந்த நூல் சர்வதேசத் தர புத்தக எண் ISBN 978-93-81134-22-1 கொண்டு 136 பக்கங்களுடன் 1/8 டெம்மி அளவில் வெளியிடப்பட்டுள்ள ஒரு நூலாகும்.

சீனாவில் இன்ப உலா
நூல் பெயர்:சீனாவில் இன்ப உலா
ஆசிரியர்(கள்):கலைமகள்
வகை:தமிழ்
துறை:பயண இலக்கியம் மற்றும் கட்டுரை
இடம்:2, சத்தியவதி நகர் முதல் தெரு,
பாடி,
சென்னை 600 050
மொழி:தமிழ்
பக்கங்கள்:136
பதிப்பகர்:கௌதம் பதிப்பகம்
பதிப்பு:நவம்பர் 2011.
ஆக்க அனுமதி:பதிப்பகத்தார்க்கு

நூலாசிரியர் தொகு

சாவோ ஜியாங் (ஆங்கிலம்: Zhao Jiang) என்கிற தனது சீனப் பெயரைத் தமிழில் கலைமகள் என்று மாற்றிக் கொண்டவர். சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப்பிரிவுத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

அணிந்துரை தொகு

இந்நூலுக்கு சென்னையிலுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் முனைவர் கடிகாசலம் என்பவர் அணிந்துரை எழுதியிருக்கிறார்.

பொருளடக்கம் தொகு

பெய்ஜிங் சீனப் பெருஞ்சுவர், தியான் அன் மென் சதுக்கம், பெய்குங் வனப் பூங்காவிலுள்ள இசையொலி எழுப்பும் கற்கள், புகழ்பெற்ற வெப்ப ஊற்று போன்ற தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. சூங் சான் வனப் பூங்காவில் அங்குள்ள விவசாயிகளின் வீடுகளில் தங்கி, பழங்குடிக் காட்டை பார்த்து வரக் கூடிய தகவல்கள், 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெய்ஜிங் தாவரவியல் தோட்டம், சீஷல்ஸ் தீவிலிருந்து கொண்டு வரப்பட்டு சீனாவில் விளைவிக்கப்படும் கடல் தேங்காய் குறித்த தகவல்கள் போன்றவைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சீனாவில் புத்த சமய நம்பிக்கையின் சின்னமாக விளங்கும் 1300 ஆண்டு காலப் பழமை வாய்ந்த பா·யுவான் கோயில் குறித்த தகவல்கள் முழுமையாகத் தரப்பட்டிருக்கின்றன. 430 ஆண்டு வரலாறு கொண்ட வான்சாவ் கோயில், மன்னர் குடும்பக் கோயிலாக விளங்கிய வரலாற்றுத் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. 1068 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தாச்சியே கோயில், அந்தக் கோயிலின் சின்னமாக விளங்கும் யூலன் மலர் குறித்த செய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்பவருக்கு உதவும் விதமாக மிக முக்கியமான இடங்கள் மற்றும் அந்த இடங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் இந்நூலில் இருபத்தாறு கட்டுரைகளாக இடம் பெற்றிருக்கின்றன.

சிறப்புகள் தொகு

  • சீனாவைச் சேர்ந்த ஒருவர் தமிழில் எழுதிய முதல் நூல் இதுதான். சீனாவில் வெளியாகியுள்ள முதல் தமிழ் நூல் இதுதான் என்றும் கூறப்படுகிறது. [1]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவில்_இன்ப_உலா_(நூல்)&oldid=2696964" இலிருந்து மீள்விக்கப்பட்டது