சீனித்துளசி
சீனித்துளசி | |
---|---|
சீனித்துளசி மலர்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ஐடிகோத்சு (Eudicots)
|
தரப்படுத்தப்படாத: | அஸ்டரிடிட்ஸ் (Asterids)
|
வரிசை: | அஸ்டேராள்ஸ் (Asterales)
|
குடும்பம்: | |
சிற்றினம்: | ஐபடோரியே (Eupatorieae)
|
பேரினம்: | |
இனம்: | எஸ். ரெபாடியானா
|
இருசொற் பெயரீடு | |
சீனித்துளசி (பெர்டோனி) |
சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி (Stevia rebaudiana) என்பது; சூரியகாந்தி குடும்ப அங்கத்தின் ஒரு பிரிவான சிடீவியா எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இனிப்புத் தன்மையைக்கொண்டுள்ள இத்தாவரத்தை, பொதுவாக மிட்டாய் இலை (candy leaf), இனிப்பு இலை (sweet leaf) மற்றும் சர்க்கரை இலை (sugar leaf) எனவும் பிராந்தியப் பெயரால் அழைக்கப்படுகிறது.[1]
தாயகம்
தொகுதென் அமெரிக்கா நாடுகளான பிரேசில், மற்றும் பரகுவை போன்ற மென்மையான ஈரப்பதம் மிகுந்த பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடிய இந்த சீனித்துளசி, ஈரமான சூழ்நிலையில் வளர்ந்தாலும், இதன் வேர்ப் பகுதியில் நீர்த்தேக்கம் உகந்ததல்ல. சீனித்துளசி எனும் இத்தாவரத்தை, இனிப்பு இலைக்காக வளர்க்கப்படுகிறது. சுவையூட்டும் பொருட்களின் ஆதாரமாக உள்ள இந்த தாவரத்தை, பல்வேறு வர்த்தக பெயர்களில் விற்கப்படுகின்றன. சர்க்கரைப் பதிலீடு சரக்காக பயன்படுத்தப்படும் அவை, சிடீவியா (stevia) என பொதுவாக அறியப்படுகின்றன. பல்வேறு இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்ய உதவும் சிடீவியால் கிளைகோசைடு எனும் மூலப்பொருள் சீனித்துளசியின் இலையிலிருந்தே பெறப்படுகிறது. மேலும், முக்கியமாக சிடீவோசைடு (stevioside) மற்றும் ரெபாடியோசைடு (rebaudioside) போன்ற மூலப்பொருட்களும் இதிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது, இவை சர்க்கரையின் இனிப்பு சுவையைவிடவும் 250 - 300 மடங்கு கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.[2]
வரலாறு மற்றும் பயன்பாடு
தொகுதென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த சீனித்துளசி, பிரேசில் மற்றும் பரகுவைச் சேர்ந்த குவாரனி எனும் பூர்வீகக் குடிகளால் சுமார் 1500 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது.[3]
1899 ஆம் ஆண்டில், தாவரவியலாளர் மோயெசு சாண்டியாகோ பெர்டோனி (Moisés Santiago Bertoni) என்பவரால் முதன்முதலாக கிழக்கு பராகுவேவில் வளர்ந்த இத்தாவரத்தை கண்டறிந்து, அதன் இனிப்பு சுவையை விவரிக்கப்பட்டுள்ளது.[4]
1931 ஆம் ஆண்டில், வேதியியல் வல்லுநர்களான எம். பிரீடெல் (M. Bridel) மற்றும் ஆர். லாவீல்ல் (R. Lavielle) ஆகியோர்களால், அத்தாவரத்தின் இலைகளிலிருந்து கிளைகோசைடுகள் (Glycosides), சிடீவிசைடுகள் (Steviosides), மற்றும் ரெபாடியோசைடுகளை (Rebaudioside) தனித்தனியாக இனிப்பு சுவைகளை தனிமைப்படுத்தினர்.[5] மேலும், அக்லிகோன் (Aglycone) மற்றும் கிளைகோசைட்டின் சரியான கட்டமைப்பு 1955 இல் வெளியிடப்பட்டது.[6]
சாகுபடி
தொகுபெரும்பகுதி விதைகள் முலைப்பத் திறன் அற்று ஒரு சிறிய சதவிகிதம் மட்டும் இனப்பெருக்கம் செய்யும் சீனித்துளசி தாவரத்தை, தாவர மரபியல் படியெடுப்பு மூலம் இனப்பெருக்கம் செய்வதே சிறந்த முறையாக கருதப்டுகிறது.[7] மேலும், பரந்த புல்வெளிகளிலும், மலைப்பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது.[8]
வளரியல்பு
தொகு2 அடி - 3 அடி உயரம் வரையில் வளரக்கூடிய இந்த இனிப்புத் துளசி, இயற்கை உரம், மற்றும் மக்கிய தொழு உரத்தில் மட்டுமே வளரும். சுயமாக மகரந்தச் சேர்க்கையில் விதைகளை உருவாக்கும் தன்மையைக் கொண்ட இத்தாவரத்தின் பூக்கள் வெள்ளை நிறத்திலும், விதைககள் கருமை நிறத்திலும் காணப்படுகிறது.[9]
சான்றுகள்
தொகு- ↑ "Sugar Leaf 'Stevia' live plan". gonzalezagrogardens (ஆங்கிலம்) - 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-06-17.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Stevia Leaf Powder". taoorganics.com (ஆங்கிலம்) - OCTOBER 6, 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-06-18.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Stevia". dulcerodrigues.info (ஆங்கிலம்) - 2000 - 2016. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ "Stevia rebaudiana". allaboutheaven.org (ஆங்கிலம்) - 2004-2017. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
- ↑ Stevia rebaudiana (Bert.) Bertoni - A Reviwe - 1 / 20
- ↑ STEVIA REBAUDIANA - MAIN CONSTITUENTS AND THEIR USE
- ↑ Organic stevia green leaf extract powder
- ↑ "Stevia Seeds - Herb |SI SEEDS - SEEDS GALLERY". Archived from the original on 2017-06-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.
- ↑ "சர்க்கரைத்துளசி". thamil.co.uk (தமிழ்) - 19/03/2015. Archived from the original on 2016-12-26. பார்க்கப்பட்ட நாள் 2017-07-08.