சீமா கோலி (Seema Kohli) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமகால கலைஞர், சிற்பி மற்றும் கவிஞர் என அறியப்படுகிறார். [2] [3] ஓவியம், சிற்பம் மற்றும் நிறுவுதல் என பல்வேறு பணிகளில் இவர் பணியாற்றியுள்ளார். [4]

சீமா கோலி
Seema Kohli
பிறப்பு1960
தில்லி
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லி பல்கலைக்கழகம்
வலைத்தளம்
www.seemakohli.com

கொச்சி-முசிரிசு பைனாலே எனப்படும் கலை பொருட்காட்சி, இத்தாலியில் உள்ள புளோரன்சு பைனாலே என்ற பொருட்காட்சி, வெனிசு பைனாலே என்ற வெனிசு நகரத்திலுள்ள கலை பண்பாட்டு பொருட்காட்சி, இந்தியாவின் தேசிய நவீன கலை காட்சிக்கூடம் , சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்ட் பாசல் எனப்படும் கண்காட்சி, ஜெய்ப்பூர் இலக்கிய விழா அரங்கம், சகாங்கீர் கலை காட்சிக் கூடம் மற்றும் இந்திய கலை கண்காட்சி ஆகிய இடங்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.[5] [6] [7]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

சீமா கோலி 1960 ஆம் ஆண்டு இந்தியாவின் தில்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா அவுசில் கோலி தனது பட்டப்படிப்பை முடித்தார்.[8][9]

2009 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்சு நகரில் நடந்த புஃப்ளோரன்சு பைனாலே என்ற பொருட்காட்சியில் சீமா கோலி தனது "சுவயம்சித்தா - கட்டுக்கதை, மனம் மற்றும் இயக்கம்" படத்திற்காக தங்கப் பதக்கம் பெற்றார். [10]

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் மியூசியம் பைனாலே என்ற கண்காட்சிக்கும், செய்ப்பூர் இலக்கியத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு கல்வி நிறுவனங்களுக்கும் இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இவருடைய தேநீர் கோப்பையில் ஒரு புயல் என்ற புத்தகம் சஞ்சித் கலை, கலை பாரம்பரியம் மற்றும் ஆருசி கலை போன்ற கண்காட்சிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. [11] [12]

கோலி 2016 ஆம் ஆண்டில் கலா கோடா கலை விழாவில் 1,000 வண்ண வெட்டுக் கண்ணாடிகள் மற்றும் 700 கண்ணாடி வைத்திருப்பவர்களைப் பயன்படுத்தி ஒரு பெரிய நிறுவலைத் உருவாக்கினார். [13]

2019 ஆம் ஆண்டில், புனித கலை அருங்காட்சியகம் (மோசா) கோலியின் கலைப்படைப்புகளின் ஆறு மாத கண்காட்சியை பெல்ஜியத்தின் பிரசல்சுக்கு அருகிலுள்ள தர்புய், ராதாதேசு என்ற இடத்தில் நடத்தியது. [14]

புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் தொகு

  • "யோகினிகளின் பாதையில் தெய்வங்களை அனுபவிப்பது" சீமா கோலியின் பங்களிப்பு - 2019 [15] [16]
  • எனது தேநீர் கோப்பையில் ஒரு புயல், 2022 [17]

விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொகு

  • 2014 ஆம் ஆண்டுக்கான பெண் அதிகாரம் , சிறந்த சாதனையாளர் விருது, மாலிகுல் தகவல் தொடர்பாடல், மும்பை [18]
  • 2007 ஆம் ஆண்டுக்கான லலித் கலா அகாடமி பெண்களுக்கான தேசிய விருது [19]

மேற்கோள்கள் தொகு

  1. "Seema Kohli's art performance based on her father's unpublished autobiography, Miter Pyaree Nu, combines inhabited land with the unified consciousness". Indulgexpress (in ஆங்கிலம்).
  2. "Imagining the universe as a womb and bringing a starfish home: Artist Seema Kohli on creating happy memories". Moneycontrol (in ஆங்கிலம்).
  3. "A tryst with the yoginis". The New Indian Express.
  4. "This stirring exhibition is showcasing art with a potato-based twist". India Today (in ஆங்கிலம்).
  5. "Home is where the heart is: Artist Seema Kohli shares her idea of home through art". The Indian Express.
  6. "Reliving Van Gogh". habiartfoundation.org.
  7. "A Café Exposition: Reliving Van Gogh | India International Centre". iicdelhi.in.
  8. "Artist Seema Kohli on the India Art Fair 2022: 'Art is alive, physical and raw'-Art-and-culture News, Firstpost". Firstpost (in ஆங்கிலம்). 2 May 2022.
  9. "The philosopher in her studio in Delhi". The Indian Express.
  10. "Swayam Siddha: The Self Realized". Take Art Magazine. 5 November 2019.
  11. Nair, Uma. "Is this art? Seema Kohli Chai at Nehru Park, New Delhi". The Times of India.
  12. Narayanan, Chitra (29 April 2022). "India Art Fair opens in the Capital with pandemic and sustainability themes dominating". Thehindubusinessline (in ஆங்கிலம்).
  13. "Walk through a wonderland at Kala Ghoda". Hindustan Times (in ஆங்கிலம்). 1 February 2016.
  14. "Spirituality transcends religion: Artist Seema Kohli". Hindustan Times (in ஆங்கிலம்). 14 July 2019.
  15. "Experiencing the Goddess: On the Trail of the Yoginis – BOOK LAUNCH - Jaipur Literature Festival". Jaipurliteraturefestival.org (in ஆங்கிலம்). 17 September 2013.
  16. Chawla, Janet; Kohli, Seema; Dupuis, Stella (1 January 2019). "Experiencing the Goddess On the Trail of the Yoginīs". Academia.
  17. "Home is where the heart is: Artist Seema Kohli shares her idea of home through art". The New Indian Express.
  18. "Seema Kohli: From the canvas of her life and art". thedailyeye.info (in ஆங்கிலம்).
  19. "Seema Kohli". South Asian Art Gallery.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_கோலி&oldid=3929145" இலிருந்து மீள்விக்கப்பட்டது