சீமோர் நர்ஸ்
சீமோர் மெக்டொனால்ட் நருசு (Seymour MacDonald Nurse 10 நவம்பர் 1933 – 6 மே 2019) ஒரு முன்னாள் பார்படோசு துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] 1960 மற்றும் 1969 க்கு இடையில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்டப் அணிக்காக 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடினார். அதிரடி மட்டையாளராகக் கருதப்படும் இவர் 1969 ஆம் ஆண்டில் ஓய்வினைப் பெற்றார்.[2] இவர் இதுவரையில் 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2523 ஓட்டங்கள் எடுத்தார். இதில் அதிகபட்சமாக 258 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார். 141 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 9489 ஓட்டங்களை எடுத்தார். இதில் அதிகபட்சமாக 258 ஓட்டங்களை எடுத்தார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுநர்ஸ் 10 நவம்பர் 1933 அன்று பார்படோஸின் செயிண்ட் மைக்கேலில் பிறந்தார். ஒரு வறுமையான பின்னணியினைக் கொண்டவரான இவர், ஒரு தச்சரின் மகன் ஆவார். இவருக்கு ஒரு சகோதரன் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் குடும்பத்தில் இளைய மகன் ஆவார்.[3] அவரது மூத்த சகோதரர் சின்க்ளேர் ஒரு நேர்ச் சுழல் பந்து வீச்சாளர் ஆவார். துவக்கத்தில் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆர்வத்தைக் காட்டினார், ஆனால் விளையாட்டைத் தொடரவில்லை. நர்ஸ் செயின்ட் ஸ்டீபன்ஸ் பாய்ஸ் பள்ளியில் பள்ளிக்குச் சென்றார், அங்கு அவர் கால்பந்து மற்றும் துடுப்பாட்டப் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கினார். காலில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் இவர் காலப்ந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 16 ஆம் வயதில் இவர் பள்ளியில் இருந்து விலகினார். ஆனால் தனது முடிவிற்காக பின்னர் வருந்தினார்.
வறுமையான பின்னணியில் இருந்து வந்த நர்ஸ் இவர் பார்படோசு துடுப்பாட்ட அணிக்காக தனது உள்ளூர் துடுப்பாட்ட வாழ்க்கையினைத் துவங்கினார். [4] பின்னர் இவர் பே ஸ்ட்ரீட் பாய்ஸ் சங்கத்தில் விளையாடினார்.இங்கு முன்னாள் வீரர்களான கார்பீல்ட் சோபர்ஸ் மற்றும் ஹன்ட் ஆகியோர் இந்தச் சங்கத்தில் விளையாடியுள்ளனர். [3] இங்கு சிறப்பாக தனது திறமையினை வெளிப்படுத்திய இவர் , பின்னர் எம்பயர் துடுப்பாட்ட சங்கத்தில் விளையாடினார்.எவர்டன் வீக்ஸை அவர் அங்கு சந்தித்தார். [5]
ஜூலை 1958 இல் ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள மெல்போர்ன் ஓவலில் ஜமைக்காவிற்கு எதிராக தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமான நர்ஸ் தனது 25 வயது வரை பார்படோஸிற்காக விளையாடவில்லை. முதல் ஆட்டப் பகுதியில் நர்ஸ் 21 ஓட்டங்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது ஆட்டப் பகுதியில் 35 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார்.அந்தப் போட்டியில் பார்படோசு துடுப்பாட்ட அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. [6] அந்த மாத இறுதியில் சபினா பார்க் அரங்கத்தில் நடந்த ஜமைக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில், நர்ஸ் தனது முதல், முதல் தரத் துடுப்பாட்டப் போட்டி நூறு ஓட்டகங்களை அடித்தார். அந்தப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்கள் எடுத்தார். [7] அடுத்த ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நர்ஸ் 213 ஓட்டங்கள் எடுத்தார். கேரி சோபர்ஸுடன் இணைந்து 306 ஓட்டங்கள் எடுத்தார்.
சான்றுகள்
தொகு- ↑ Mason, Peter (7 May 2019). "Seymour Nurse obituary". The Guardian. https://www.theguardian.com/sport/2019/may/07/seymour-nurse-obituary. பார்த்த நாள்: 7 May 2019.
- ↑ Obituaries 'Seymour Nurse Cricketer who on his day was one of the finest stroke players ever to bat for the West Indies' Daily Telegraph p 25 Issue no 51,002(dated Thursday 9 May 2019)
- ↑ 3.0 3.1 "Cricketer of the Year 1967: Seymour Nurse". Wisden Cricketers' Almanack. John Wisden & Co. 1967. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
- ↑ Sandiford, p. 84.
- ↑ Spooner, Phillip (5 December 1998). "Seymour Nurse: My First Test". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
- ↑ "Jamaica v Barbados". First-Class matches in West Indies 1958. CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
- ↑ "Jamaica v Barbados". First-Class matches in West Indies 1958. Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.