சீரியம்(III) கார்பனேட்டு
சீரியம்(III) கார்பனேட்டு (Cerium(III) carbonate) என்பது Ce2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். சீரியம்(III) நேர்மின் அயனிகளும் கார்பனேட்டு எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இவ்வுப்பு உருவாகிறது. இதனுடைய தூய வடிவம் இயற்கையில் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் சீரியத்தைக் கொண்டிருக்கும் கார்பனேட்டுகள், குறிப்பாக பாசிட்னசைட்டு குழு கனிமங்கள் மோனசைட்டுடன் சீரியத்தின் தாதுவாகக் கிடைக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
சீரியம்(III) கார்பனெட்டு
சீரியம் டிரைகார்பனேட்டு | |
வேறு பெயர்கள்
சீரசு கார்பனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
537-01-9 | |
EC number | 208-655-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 160516 |
| |
UNII | CTT48UBF1V |
பண்புகள் | |
Ce2(CO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 460.26 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 500 °C (932 °F; 773 K) |
மிகக்குறைவு | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூலக்கூறு எடை
தொகுசீரியம்(III) கார்பனேட்டு சேர்மத்தின் மூலக்கூற்று எடை 460.2587 கி/மோல் ஆகும்[1].
வெவ்வேறு பெயர்கள்
தொகுஐயுபிஏசி முறையில் இதற்கு சீரியம் டிரைகார்பனேட்டு என்று பெயராகும்[2]. டைசீரியம் டிரைகார்பனேட்டு, சீரியம்(III) கார்பனேட்டு, சீரியம் கார்பனேட்டு, சீரசு கார்பனேட்டு, டைசீரியம்(3+) அயனி டிரைகார்பனேட்டு என்பன இதன் வேறு வேதியியல் பெயர்களாகும்.
பயன்
தொகுசீரியம்(III) குளோரைடு தயாரிப்பில் சீரியம்(III) கார்பனேட்டு பயன்படுகிறது. மேலும் வெள்ளொளிர் விளக்குகளிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள்[3].