சுகல்வா காப்பகம்

சுகல்வா சரணாலயம் (Suhelva Sanctuary) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பலராம்பூர், கோண்டா மற்றும் சிராவஸ்தி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு வனவிலங்கு காப்பகமாகும். இது பல்ராம்பூரிலிருந்து சுமார் 66 கி. மீ தொலைவிலும், கோண்டாவிலிருந்து 120 கி. மீ. தொலைவிலும் இலக்னோவிலிருந்து சுமார் 210 கி. மீ. தூரத்திலும் உள்ளது.இது 452 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]

வரலாறு

தொகு

சுகல்வா காடு உத்தரப்பிரதேசத்தின் பழமையான காடுகளில் ஒன்றாகும். மேலும் 1998ஆம் ஆண்டில் வனவிலங்கு சரணாலயமாகத் தகுதி வழங்கப்பட்டது.

அணுகல்

தொகு

வானூர்தி மூலம்

தொகு

இலக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் சுஹல்வாவிலிருந்து 230 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தச் சரணாலயத்திலிருந்து சுமார் 350 கி. மீ. தொலைவில் வாரணாசியில் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

தொடருந்து மூலம்

தொகு

சரணாலயத்திலிருந்து 38 கி. மீ. தொலைவில் உள்ள துளசிப்பூர் சுகல்வா அருகிலுள்ள தொடருந்து நிலையமாகும்.

சாலை வழியாக

தொகு

மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியுடனும் சாலைகள் மூலம் சுகல்வா நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

தாவரங்கள்

தொகு

சால், சீசம், கைர், சாகான் (டேக் அஸனா, ஜமுன், ஹல்டு, பால்டு, தாமினா, ஜிங்கன் மற்றும் பஹேரா மரங்கள்) ஆகியவை சரணாலயத்தின் வனப்பகுதியை உருவாக்குகின்றன.[2]

விலங்கினங்கள்

தொகு

வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, தேன் கரடி, மறிமான் மற்றும் மான் ஆகியவை சுகல்வாவின் முக்கிய பாலூட்டிகளாகும். மற்ற விலங்குகளில் நரி, கழுதைப்புலி, இந்திய யானை மற்றும் காட்டுப் பூனை ஆகியவை அடங்கும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Official Website of UP Ecotourism". www.upecotourism.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  2. "Official Website of UP Ecotourism". www.upecotourism.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகல்வா_காப்பகம்&oldid=4112669" இலிருந்து மீள்விக்கப்பட்டது