சுகாசினி கங்குலி
சுகாசினி கங்குலி (Suhasini Ganguly) ஓர் இந்தியப் பெண் சுதந்திரப் போராட்டத் தலைவராவார். 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.இந்திய சுதந்திர இயக்கத்தில் சுகாசினி பன்கேற்றார். [1][2][3][4][5][6][7]
சுகாசினி கங்குலி Suhasini Ganguly | |
---|---|
பிறப்பு | 3 பிப்ரவரி 1909 குல்னா, வங்காளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 23 மார்ச்சு 1965 கொல்கத்தா |
மற்ற பெயர்கள் | புட்டுதி |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபிரித்தானிய இந்தியாவின் காலத்தில் வங்காள தேசத்திலிருந்த குல்னா நகரத்தில் 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 அன்று அபிநாசந்திர கங்குலி மற்றும் சரளா சுந்தர தேவிக்கு சுகாசினி மகளாகப் பிறந்தார். இவர்களது குடும்பம் வங்காளத்தின் டாக்காவின் பிக்ராம்பூரைச் சேர்ந்ததாகும். 1924 ஆம் ஆண்டு டாக்கா ஈடன் பள்ளியில் மெட்ரிகுலேசன் படிப்பில் இவர் தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் இடைநிலை கலை படிக்கும் போது, காது கேளாத மற்றும் ஊமை பள்ளியில் ஆசிரியர் வேலை பெற்று கொல்கத்தாவிற்குச் சென்றார்.
புரட்சிகர நடவடிக்கைகள்
தொகுதொடக்கம்
தொகுசுகாசினி கொல்கத்தாவில் தங்கியிருந்தபோது கல்யாணி தாசு மற்றும் கமலா தாசுகுப்தாவுடன் தொடர்பு கொண்டார் . அவர்கள் இவரை யுகந்தர் கட்சிக்கு அறிமுகப்படுத்தினர். சுகாசினி சாத்திரி சங்கத்தின் உறுப்பினரானார். கல்யாணி தாசு மற்றும் கமலா தாசுகுப்தாவின் நிர்வாகத்தின் கீழ், சுகாசினி சாத்திரி சங்கத்தின் சார்பில், ராஜா சிறீசு சந்திர நந்தியின் தோட்டத்தில் நீச்சல் கற்றுக்கொடுத்தார். அங்கு இவர் 1929 ஆம் ஆன்டில் புரட்சியாளர் ராசிக் தாசுடன் பழகினார்.[1] பிரித்தானிய அரசாங்கம் இவருடைய செயல்பாடுகளைப் பற்றி அறிந்ததும், இவர் பிரெஞ்சு பிரதேசமாக இருந்த சந்தாநகரில் தஞ்சமடைந்தார்.[8]
சிட்டகாங்கு ஆயுதக் களஞ்சியம்
தொகு1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற சிட்டகாங்கு ஆயுதக் களஞ்சியத் தாக்குதலுக்குப் பிறகு, சாத்திரி சங்கத் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சசாதர் ஆச்சார்யாவும் சுகாசினி கங்குலியும் கணவன் மனைவி வேடத்தில் அனந்த சிங், லோகேநாத் பால், ஆனந்த குப்தா, இயிபான் கோசல் போன்றவர்களுக்கு சந்தன்நகரில் அடைக்கலம் கொடுத்தனர். 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று பிரித்தானிய காவல்துறை இவர்கள் இருந்த வீட்டைத் தாக்கியது. மோதல் தொடர்ந்தது. துப்பாக்கிச் சண்டையில் இயிபான் கோசலும் அவரது ஆதரவாளர்களும் மரணமடைந்தனர். மற்ற புரட்சியாளர்கள் திருமதி. கங்குலி உட்பட அனைவரும் பிடிபட்டனர்.[3] ஆனால் அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட்டனர்.[1]
1932 ஆம் ஆண்டு வங்காள ஆளுநர் சிடான்லி இயாக்சனை கொல்ல முயன்ற இந்திய தேசிய வாதியும் புரட்சியாளருமான பீனா தாசுடன் சுகாசினி தொடர்பு கொண்டவராக இருந்தார்.]][9] வங்க குற்றவியல் சட்ட திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் கங்குலி சிறைப்பிடிக்கப்பட்டு இச்சிலி தடுப்புக்காவல் முகாமில் 1932 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரை வைக்கப்பட்டார். இங்கிருந்து வெளியேறிய பிறகு சுகாசினி இந்தியாவின் பொதுவுடமை இயக்கத்தில் கலந்து கொண்டார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் பெண்கள் அணியில் முன்னணி உறுப்பினராக இணைக்கப்பட்டிருந்தார்.[10] இந்திய பொதுவுடமைக் கட்சி பங்கேற்காததால் இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை. என்றாலும் இவர் தனது காங்கிரசு சகாக்களுக்கு உதவினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட ஏமந்த தரப்தாருக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக மீண்டும் 1942 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை சுகாசினி சிறைக் காவலில் வைக்கப்பட்டார்.[1] சுகாசினி கங்குலி பொதுவுடமை கட்சியின் மீது கொண்டிருந்த பற்றுக்காக 1948 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]
பிற்கால வாழ்க்கை மற்றும் இறப்பு
தொகுகங்குலி தனது வாழ்நாள் முழுவதும் சமூகப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1965 ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக இவர் கொல்கத்தாவின் பிரசிடென்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அலட்சியத்தால் கவனிப்பாரற்று இழுப்புவாத நோயால் பாதிக்கப்பட்டு 23 மார்ச் 1965 அன்று இறந்தார்.[1][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Sengupta, Subodh; Basu, Anjali (2016). Sansad Bangali Charitavidhan (Bengali). Vol. 1. Kolkata: Sahitya Sansad. p. 827. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7955-135-6.
- ↑ Ghosh, Durba. Gentlemanly Terrorists: Political Violence and the Colonial State in India, 1919–1947. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107186668.
- ↑ 3.0 3.1 Bhattacharya, Brigadier Samir. NOTHING BUT!. Partridge Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781482814767.
- ↑ "Mysterious girls".
- ↑ Vohra, Asharani (1986). Krantikari Mahilae. New Delhi: Department of Publications, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 37–39.
- ↑ "Book Review Swatantrata Sangram Ki Krantikari Mahilayen by Rachana Bh…".
- ↑ 7.0 7.1 De, Amalendu. "সুহাসিনী গাঙ্গুলী : ভারতের বিপ্লবী আন্দোলনের এক উল্লেখযোগ্য চরিত্র".
- ↑ Chandrababu, B. S.; Thilagavathi, L. Woman, Her History and Her Struggle for Emancipation. Bharathi Puthakalayam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189909970.Chandrababu, B. S.; Thilagavathi, L. (2009). Woman, Her History and Her Struggle for Emancipation. Bharathi Puthakalayam. ISBN 9788189909970.
- ↑ Chatterjee, India (1988). "The Bengali Bhadramahila —Forms of Organisation in the Early Twentieth Century". Manushi: 33–34. http://www.manushi-india.org/pdfs_issues/PDF%20files%2045/26.%20The%20Bengali%20Bhadramahila.pdf. பார்த்த நாள்: 2021-08-12.
- ↑ Bandopadhyay, Sandip (1991). "Women in the Bengal Revolutionary Movement (1902 - 1935)". Manushi: 34. http://www.manushi-india.org/pdfs_issues/PDF%20files%2065/man_of_tomorrow.pdf. பார்த்த நாள்: 2021-08-12.