சுகாதாரக் காத்திருப்பு
சுகாதாரக் காத்திருப்பு (Waiting in healthcare) என்பது ஒரு நோயாளி மருத்துவ சிகிச்சையின் போதும் அதற்கு முன்னரும் அனுபவிக்கும் எந்தவொரு காத்திருக்கும் காலத்தையும் குறிக்கிறது. ஒரு மருத்துவரை சந்திக்க முன் அனுமதிக்காக காத்திருத்தல், சந்திப்பதற்கு முன்பு காத்திருப்பு அறையில் தங்கியிருத்தல், மற்றும் மருத்துவ செயல்முறைகளுக்காக மருத்துவரால் கவனிக்கப்படும் உற்றுநோக்கல் காலம் ஆகியவையும் சுகாதாரத்துக்கான காத்திருப்பில் இடம் பெறும் வெவ்வேறு நிலைகளாகும்.
ஒரு நோயாளி காத்திருக்கும்போது, அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் கூட ஒரு முடிவுக்காகக் காத்திருக்க நேரிடுகிறது.[1][2]
மருத்துவமனைகளில் உள்ள காத்திருக்கும் அறைகள் நோயாளிகளுக்கு சுகாதார பராமரிப்பை வழங்கும் மற்ற அறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று சில நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இவ்வொருங்கிணைப்பு தகவல் புதுப்பிப்பிற்காக காத்திருக்கும் எவருக்கும் சுதந்திரமாக கிடைக்க வழிகோலும்.[3]
2014 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலுள்ள நோயாளி- விளைவுகள் மைய ஆராய்ச்சி நிறுவனம் காத்திருப்பு அறை அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வுக்கென நிதியளிக்கத் தொடங்கியது.[4]
அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் அறுவைச் சிக்கிச்சை அறை கிடைக்குந் தன்மையைப் பொறுத்து அமைகிறது. அந்த அறையில் சிகிச்சை பெறும் எந்தவொரு நோயாளியாவது திட்டமிடப்பட்டதை விட அதிக நேரம் எடுத்துக்கொள்ள நேரிடும்போது அடுத்ததாக காத்திருக்கும் அனைத்து நோயாளிகளும் தங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.[5] எதிர்பாராத தாமதங்கள் நிகழும் போது அறுவைச் சிகிச்சை அறையின் திறமையான பயன்பாட்டை அதிகரிப்பது கடினமாவதாலும் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.[5]
நோயாளி எதிர்கொள்ளும் திருப்தி நிலையையும் காத்திருப்பு பாதிக்கிறது.[6][7][8]
உண்மையில் கிடைக்கும் சிகிச்சைக்கான நேரத்தைவிட அதற்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நேரம் அதிகமாகிவிடுகிறது.[9]
பரிசோதனை அறை காத்திருப்பு நேரம் நோயாளிக்கு சுகாதாரக் கல்வியைக் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Warren, NA (November 1993). "Perceived needs of the family members in the critical care waiting room". Crit Care Nurs Q. 16 (3): 56–63. doi:10.1097/00002727-199311000-00009. பப்மெட்:8242445. https://archive.org/details/sim_critical-care-nursing-quarterly_1993-11_16_3/page/56.
- ↑ McCarthy, Melissa L.; Ding, Ru; Pines, Jesse M.; Zeger, Scott L. (2011). "Comparison of Methods for Measuring Crowding and Its Effects on Length of Stay in the Emergency Department". Academic Emergency Medicine 18 (12): 1269–1277. doi:10.1111/j.1553-2712.2011.01232.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1069-6563. பப்மெட்:22168190.
- ↑ Halpern, Neil A. (2014). "Innovative Designs for the Smart ICU". Chest 145 (3): 646–658. doi:10.1378/chest.13-0004. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-3692. https://archive.org/details/sim_chest_2014-03_145_3/page/646.
- ↑ staff (April 22, 2014). "The PROMIS in Putting Patients' Waiting Room Time to Good Use". pcori.org. பார்க்கப்பட்ட நாள் 16 April 2015.
- ↑ 5.0 5.1 Dexter, Franklin; Epstein, Richard H.; Traub, Rodney D.; Xiao, Yan (2004). "Making Management Decisions on the Day of Surgery Based on Operating Room Efficiency and Patient Waiting Times". Anesthesiology 101 (6): 1444–1453. doi:10.1097/00000542-200412000-00027. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-3022. பப்மெட்:15564954. https://archive.org/details/sim_anesthesiology_2004-12_101_6/page/1444.
- ↑ Becker, Franklin; Douglass, Stephanie (2008). "The Ecology of the Patient Visit". Journal of Ambulatory Care Management 31 (2): 128–141. doi:10.1097/01.JAC.0000314703.34795.44. பன்னாட்டுத் தர தொடர் எண்:0148-9917. பப்மெட்:18360174.
- ↑ Muntlin, Asa; Gunningberg, Lena; Carlsson, Marianne (2006). "Patients' perceptions of quality of care at an emergency department and identification of areas for quality improvement". Journal of Clinical Nursing 15 (8): 1045–1056. doi:10.1111/j.1365-2702.2006.01368.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0962-1067. பப்மெட்:16879549. https://archive.org/details/sim_journal-of-clinical-nursing_2006-08_15_8/page/1045.
- ↑ Bruce, TA; Bowman, JM; Brown, ST (December 1998). "Factors that influence patient satisfaction in the emergency department.". J Nurs Care Qual 13 (2): 31–37. doi:10.1097/00001786-199812000-00005. பப்மெட்:9842173. https://archive.org/details/sim_journal-of-nursing-care-quality_1998-12_13_2/page/31.
- ↑ Bailey, Norman T. J. (1952). "A Study of Queues and Appointment Systems in Hospital Out-Patient Departments, with Special Reference to Waiting-Times". Journal of the Royal Statistical Society. Series B (Methodological) 14 (2): 185–199.
- ↑ Oermann, MH (April–June 2003). "Effects of educational intervention in waiting room on patient satisfaction.". J Ambul Care Manage 26 (2): 150–158. doi:10.1097/00004479-200304000-00007. பப்மெட்:12698929.