சுகிர்தராணி
சுகிர்தராணி (Sukirtharani) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணியவாதியாவார் [1] [2] சமகால தலித் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான இவர் நன்கு அறியப்படுகிறார் [3]
சுகிர்தராணி | |
---|---|
பிறப்பு | ராணிப்பேட்டை | 7 ஏப்ரல் 1972
தொழில் | பெண்ணியவாதி, கவிஞர் |
தேசியம் | இந்தியர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுகவிஞர் சுகிர்தராணி, இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்திற்கு அருகில் உள்ள இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாயார் தவமணி, தந்தை – சண்முகம் என்பவர்களாவர். கவிஞர் சுகிர்தராணி, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். பொருளாதாரம் மற்றும் தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
கவிஞர் சுகிர்தராணி 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறார். தமிழில் ஆறு கவிதைத் தொகுப்புகளும் ஆங்கிலத்தில் ஒரு மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பும் எழுதியுள்ள இவரின் படைப்புகளில் பெண் உடலைக் கொண்டாடுவதைப் பற்றியும், பெண்ணாகவும் தலித்தாகவும் பிறந்த இரட்டை அனுபவத்தை உள்ளடக்கிய அடக்குமுறை சாதி அமைப்பின் மூலம் அடையும் தண்டனைகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவரது படைப்புகள் சுற்றுச்சூழல் பெண்ணிய அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. [4] லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோமின் மொழிபெயர்க்கப்பட்ட முரட்டு பெண்கள் பொல்லாத வார்த்தைகள் என்ற தொகுப்பில் கவிஞர்கள் குட்டி ரேவதி, மாலதி மைத்ரி மற்றும் சல்மா ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். [5] ஹோல்ம்ஸ்ட்ரோம் தனது தொகுப்பில் சுகிர்தராணியை "புதிய பிறப்பின் அனைத்து கரடுமுரடான மற்றும் உடல் யதார்த்தத்துடன், இரத்தத்தில் ஒட்டும் ஒரு குழந்தை மொழியை" தேடுபவர் என்று கவிதை மொழியில் சொல்லியுள்ளார். [6]
விருதுகள்
தொகு- தேவமகள் கவிதூவி விருது,
- பெண்கள் முன்னணியின் சாதனையாளர் விருது, மற்றும்
- புதுமைப்பித்தன் நினைவு விருது போன்ற பல விருதுகளை அவரது படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார்.
- 2020 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது[7]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகுதொகுப்புகள்
தொகு- கைபற்றி யென் கனவு கேள்
- இரவு மிருகம்
- காமத்திப்பூ[8]
- தீண்டப்படாத முத்தம்
- அவளை மொழிபெயர்த்தல்
- இப்படிக்கு ஏவாள்
- நீர் வளர் ஆம்பல்
- சுகிர்தராணி கவிதைகள் (1996 - 2016)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sukirtharani". Poets translating Poets. Goethe Institut. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
- ↑ Gumpenapalli, Sanjeev (2018-01-10). "5 Dalit Women Poets Who Remind Us That Caste And Patriarchy Are Not Exclusive". Feminism In India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
- ↑ Kartikeyan, Divya (16 July 2017). "Interview: A Dalit Poet's Explorations Into Discrimination and the Female Body". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
- ↑ Sriram, Abhirami Girija (30 August 2019). "Mapping herstories". Frontline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
- ↑ Swami, Sridala (2013-03-16). "Book Review | Wild Girls Wicked Words". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
- ↑ Chabria, Priya Sarukkai (16 May 2019). "Fafnir's heart: A legend from Norse mythology inspires an anthology of poetry from across the world". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
- ↑ "2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு". புது திண்ணை. https://puthu.thinnai.com/archives/43484. பார்த்த நாள்: 18 April 2023.
- ↑ "பெண்ணின் வலியைப் பெண் எழுதுவதே சரி! : சுகிர்தராணி பேட்டி". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/641524-sukirtharani-interview.html. பார்த்த நாள்: 18 April 2023.