சல்மா (கவிஞர்)
இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ் எழுத்தாளர்
சல்மா (Salma) ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர் தொண்ணூறுகளில் தொடங்கி பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். சலீம் ஜாஃபர், முஹம்மது நதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா பொன்னாம்பட்டி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். பின்னர், தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்.[1] தி.மு.க.வில் மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.[2]
கவிஞர் சல்மா | |
---|---|
தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவர் | |
தொகுதி | மருங்காபுரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 19, 1967 சென்னை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | தி.மு.க. |
துணைவர் | அப்துல் மாலிக் ( 1988 - தற்போது வரை ) |
பிள்ளைகள் | சலீம் ஜாஃபர், முஹம்மது நதீம் |
வாழிடம் | சென்னை |
கவிதைத் தொகுப்புகள்
தொகு- ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
- பச்சை தேவதை
புதினங்கள்
தொகு- இரண்டாம் ஜாமங்களின் கதை
- மனாமியங்கள்
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2889&id1=9[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2010-06-10.
வெளி இணைப்புக்கள்
தொகு- மரத்தடி - இணைய தளம் பரணிடப்பட்டது 2007-11-06 at the வந்தவழி இயந்திரம்
- வார்ப்பு- வலைப்பதிவு பரணிடப்பட்டது 2007-10-31 at the வந்தவழி இயந்திரம்