சுகுணா புருசோத்தமன்
சுகுணா புருசோத்தமன் (1941 - 25 பிப்ரவரி 2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்[1].
பிறப்பும், இசைப்பயிற்சியும்
தொகுசுகுணா புருசோத்தமன் சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி. சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கருநாடக இசையினைக் கற்றார். லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை கற்றுக்கொண்டார்.
இசைப் பணி
தொகு- அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றியவர்.
- இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்தவர்.
- இவர் எழுதிய பாடல்களைக் கொண்ட நூல், கதம்பம் எனப் பெயரிடப்பட்டு வெளியானது.
குறிப்பிடத்தக்க மாணவர்கள்
தொகுவிருதுகள்
தொகு- சங்கீத சூடாமணி விருது, 2004 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
- கலைமாமணி விருது, 2006
- வாக்கேயக்காரர் விருது, 2006; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- சங்கீத நாடக அகாதமி விருது, 2010[2]
மறைவு
தொகுபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 25 பிப்ரவரி 2015 அன்று சென்னையில் தனது 74ஆவது வயதில் காலமானார்[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ "SUGUNA PURUSHOTHAMAN Akademi Award: Carnatic Vocal Music". Archived from the original on 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2022-01-09.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ Carnatic musician passes away at 74