சுக்பன்சு கவுர் பிந்தர்

சுக்பன்சு கவுர் பிந்தர் (Sukhbans Kaur Bhinder) (1943-2006) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக ஆறு முறை தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் இவரே ஆவார். இதில் ஐந்து முறை மக்களவையிலும் ஒரு முறை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.[1] 1980, 1985, 1989, 1992 மற்றும் 1996 இல் பஞ்சாப்பில் குர்தாஸ்பூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

அர்ஜன் சிங்கின் மகளான சுக்பன்சு, செப்டம்பர் 14, 1943 அன்று பைசலாபாத் (லாயல்பூர்) நகரில் பிறந்தார் (இப்போது பாக்கித்தானில்) உள்ளது. இவர் முசோரியிலுள்ள ஜீஸஸ் அன்ட் மேரி கான்வென்ட் பள்ளிகளில் படித்தார். பின்னர் சண்டிகரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் பட்டம் பெற்றார்..[2]

தொழில்

தொகு

சுக்பன்சு ஒரு விவசாயியாகவும், அரசியல்வாதியாகவும்,சமூக சேவகராகவும் இருந்தார். 1980இல் ஏழாவது மக்களவைஏழாவது க்களவைக்கு]] முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985ஆம் ஆண்டில் எட்டாவது மக்களவைக்கு இரண்டாவது முறையும், பின்னர் 1989இல் ஒன்பதாவது மக்களவைக்கும், 1992இல் பத்தாவது மக்களவைக்கும், 1996இல் பதினொன்றாவது மக்களவைக்கும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1997ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பாஜகவின் உறுப்பினராக மாறிய நடிகர் வினோத் கண்ணாவால் இவர் தோற்கடிக்கப்பட்டார்.[3] இவர் 2005இல் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[3]

வரதட்சணை தடையை ஆராய்வதற்கான கூட்டுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும், 1961 ஜூலை முதல் 1996 மே வரை சுற்றுலாத் துறையில் மத்திய மாநில, பொதுமக்கள் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை கூட்டுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[2]

இவர் சமூகப் பணிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திலும் ஆர்வம் காட்டினார். இவர் இந்தியச் சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழக உணவகங்களிலும், ஈஸ்ட் இந்தியா உணவகங்களிலும் நிர்வாகியாகவும் பாரிஸில் உணவக நிர்வாகியாகவும் பயிற்சி பெற்றுளளார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அக்டோபர் 12, 1961 அன்று சுக்பன்சு முன்னாள் இந்தியக் காவல் பணி அதிகாரியான பிரீதம் சிங் பிந்தரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[1] இவர், பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூரில் வசித்து வந்தார்.[2] பல மாதங்களாக இரைப்பை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் டிசம்பர் 15, 2006 அன்று தனது 63 வயதில் இறந்தார்.[3][4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Mrs Bhinder only woman to become MP six times". news.webindia123.com. Archived from the original on 2017-07-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "lspn05". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
  3. 3.0 3.1 3.2 "Congress` Rajya Sabha MP Sukhbans Kaur Bhinder dead" (in en). Zee News. 2006-12-15. http://zeenews.india.com/home/congress-rajya-sabha-mp-sukhbans-kaur-bhinder-dead_342269.html. 
  4. "Former Cong leader Bhinder cremated" (in en). www.hindustantimes.com/. 2006-12-16. http://www.hindustantimes.com/india/former-cong-leader-bhinder-cremated/story-K2MbpGtbQC2icjgOsah5MI.html. 
  5. "The Tribune, Chandigarh, India – Main News". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்பன்சு_கவுர்_பிந்தர்&oldid=3697733" இலிருந்து மீள்விக்கப்பட்டது