சுக்மா நாடு

சுக்மா நாடு (Suhma Kingdom) பரத கண்டத்தின் கிழக்குப் பகுதியில், ஒன்றுபட்ட வங்காளத்தில் அமைந்திருந்தது. மகாபாரத காவியத்தில் சுக்மா நாட்டைப் பற்றியும், அதன் அண்டை நாடான பிரசுக்மா (தற்கால வங்காள தேசம்) நாட்டைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அங்கம், வங்கம், கலிங்கம், பௌண்டரம் மற்றும் சுக்மா நாடுகளை நிறுவியவர்கள் பொதுவான முன்னோர்களைக் கொண்டவர்கள்.

மகாபாரத குறிப்புகள்

தொகு

அங்க, வங்க, கலிங்க, பௌண்டர மற்றும் சுக்மா நாடுகளை நிறுவியவர்கள், மகத நாட்டின் கிரிவிரஜா நகரத்தில் வாழ்ந்த தீர்க்க தமசின் மகனான வாலியின் (பாலி) தத்துப் பிள்ளைகள் ஆவார்.[1][2]

சுக்மா மீதான படையெடுப்புகள்

தொகு

பாண்டவர்களின் தந்தையும் குரு நாட்டின் மன்னருமான பாண்டு, காசி நாடு, மகதம், விதேகம் போன்ற கிழக்கு நாடுகளை வென்ற பின்னர் பௌண்டரம் மற்றும் சுக்மா நாடுகளை வெற்றி கொண்டார்.

தருமராசாவின் இராசசூய வேள்விக்கான நிதியை திரட்ட, அருச்சுனன் பரத கண்டத்தின் கிழக்கு நாடுகளின் மீதான படையெடுப்புகளின் போது, சுக்மா மற்றும் பிரசுக்மாவை வென்றார்.

குருச்சேத்திரப் போரில், சுக்மா, பிரசுக்மா, வங்கம், பௌண்டர நாட்டுப் படைகளையும், அதன் மன்னர்களான சமுத்திரசேனன், சந்திரசேனன் மற்றும் தம்ரலிப்தாவை வீமன் வென்றொழித்தார்.

காளிதாசன் இயற்றிய இரகுவம்சம் எனும் சமஸ்கிருத காவியத்தின் நாலாவது காண்டத்தில், இச்வாகு குல கோசல நாட்டு மன்னர் இராமன், பரத கண்டத்தின் கிழக்கில் இருந்த சுக்மா நாட்டு மன்னரை போரில் வென்றார் எனக் குறிப்பிட்டுள்ளது.[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்மா_நாடு&oldid=4057611" இலிருந்து மீள்விக்கப்பட்டது