விதேகம்
விதேகம் (Videha) (நேபாளி: विदेह) பிந்தைய வேத கால நாடுகளில் ஒன்றாகும். விதேக நாடு தற்கால இந்தியாவின் வடக்கு பிகார் - தெற்கு நேபாள எல்லையில் அமைந்திருந்தது. விதேக நாட்டின் தலைநகரம் மிதிலை நகரம் ஆகும். பிந்தைய வேத கால முடிவில், விதேக நாடு,[1] வஜ்ஜி நாட்டின் பகுதியாக மாறி, முடிவில் மகதப் பேரரசில் இணைக்கப்பட்டது.[2]விதேக நாட்டின் சிறப்பான மன்னர்களில் சனகன் முதன்மையானவர். மைதிலி மொழி விதேக நாட்டின் முதன்மை மொழியாகும்.
விதேகம் நேபாளி: विदेह | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
~ கி மு 1100–~ கி மு 500 | |||||||||
தலைநகரம் | மிதிலை, நேபாளம் | ||||||||
பேசப்படும் மொழிகள் | மைதிலி | ||||||||
சமயம் | வேத சமயம், இந்து சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
சனகன் | |||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய வேத காலம் | ||||||||
• தொடக்கம் | ~ கி மு 1100 | ||||||||
• முடிவு | ~ கி மு 500 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா நேபாளம் |
உபநிடதங்களில்
தொகுஉபநிடதங்களில் குறிப்பாக பிரகதாரண்யக உபநிடதத்தில், விதேக நாட்டையும், அதன் மன்னன் சனகரின் பிரம்ம ஞானத்தை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. யாக்யவல்க்கியர் போன்று வேதாந்த தத்துவத்தில் மிகப்புலமையுடைய இராஜரிஷியாக விளங்கியவர் விதேக நாட்டு மன்னர் சனகர்.[3] [4] பல முனிவர்கள் விதேக மன்னரிடம் ஆத்ம ஞானம் மற்றும் பிரம்ம ஞானம் தொடர்பான ஐயங்களைக் கேட்டுச் செல்வர்.
இராமாயனத்தில்
தொகுவால்மீகி எழுதிய இராமாயண காவியத்தில் விதேக நாட்டையும், அதன் மன்னர் சனகரையும் குறிக்கப்பட்டுள்ளது. சனகரின் மகள் சீதையை, கோசல நாட்டு இளவரசன் இராமன் மணந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Videha Ancient kingdom, India
- ↑ H.C. Raychaudhuri (1972), pp. 70-76
- ↑ Hem Chandra Raychaudhuri (1972), Political History of Ancient India and Nepal, Calcutta: University of Calcutta, pp.41–52
- ↑ Michael Witzel (1989), Tracing the Vedic dialects in Dialectes dans les litteratures Indo-Aryennes ed. Colette Caillat, Paris, pages 13, 39-46, 141-143
- The Geography of India: Sacred and Historic Places. Britannica Educational Publishing.