சுங்குவார்சத்திரம்
சுங்குவார்சத்திரம் (Sunguvarchathiram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இல் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரத்திற்கு 25 கிமீ தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையப்பெற்ற ஒரு தொழில் நகரமாகும்.[1] இங்கு மிகவும் பெயர்பெற்ற தொழிற்சாலைகளான மோட்டொரோலா கைபேசி நிறுவனம், சாம்சங் கைபேசி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் கைபேசிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான பாக்சுகான் போன்ற பல்வேறுதரப்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.[2] காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 25 மணித்துளிகள் பயணத்தில் இந்த ஊரகப்பாங்கான தொழில் நகரத்தை அடையலாம்.இது பெருநகரச் சென்னைப் பகுதியில் உள்ளது.
சுங்குவார்சத்திரம் | |
---|---|
மின்னனியல் நகரம், சிப்காட் பகுதி | |
அடைபெயர்(கள்): svc | |
ஆள்கூறுகள்: 12°55′31″N 79°52′45″E / 12.9252°N 79.8791°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் மாவட்டம் |
வட்டம் | திருபெரும்புதூர் |
அரசு | |
• மொலசூர் ஊராட்சி | எசு.ஆர். தொமினிக் |
• சாந்தவேலூரு ஊராட்சி | கேஏசு. பாபு |
• திருமங்கலம் ஊராட்சி | வித்யகுமாரி சிறிதர் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 10,000 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அசுஎ | 602106 |
தொலைபேசி சுட்டெண் | 271 |
வாகனப் பதிவு | TN-87 |
நாடாளுமன்றத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "சுங்குவார்சத்திரம் துணை மின் நிலையம் துவக்கம்". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/3228-. பார்த்த நாள்: 3 July 2024.
- ↑ "திருமணம் முடிந்த பெண்களுக்கு வேலை கிடையாது? - சர்ச்சைக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம்..", TimesNowTamil, 2024-06-28, பார்க்கப்பட்ட நாள் 2024-07-03