சுசரித்ர
சுசரித்ர கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 67வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 67வது இராகத்திற்கு ஸந்தான மஞ்சரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி3 க3 ம2 ப த1 நி1 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி1 த1 ப ம2 க3 ரி3 ஸ |
- இது ஆதித்ய என்றழைக்கப்படும் 12வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
தொகு- இது ஒரு விவாதி மேளம்.
- நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம்.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் யாகப்பிரியா (31) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள்
தொகு- கிருதி : ஸந்தான மஞ்சரி, முத்துசாமி தீட்சிதர், ஆதி தாளம்
- கிருதி : வேலு மயிலே, கோடீஸ்வர ஐயர், ரூபக தாளம்
- கிருதி : சிந்தயாமி சந்ததம், மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, ஜம்ப தாளம்