யாகப்பிரியா
யாகப்பிரியா கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 31வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 31வது இராகத்திற்கு கலாவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி3 க3 ம1 ப த1 நி1 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி1 த1 ப ம1 க3 ரி3 ஸ |
- இது ருது என்றழைக்கப்படும் 6வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம் (ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
தொகு- இது ஒரு விவாதி மேளம்.
- நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம்.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சுசரித்ர (67) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள்
தொகு- கிருதி : கலாவதீ கமலாஸன யுவதி, முத்துசாமி தீட்சிதர், ஆதி தாளம்