சுசிறீ தேவி

சுசிறீ தேவி (Sushree Devi-10 அக்டோபர் 1950 - 10 சனவரி 2024) இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்தவர். முன்னதாக தேவி ஜனதா தளம் கட்சியில் இணைந்திருந்தார். தேவி இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். தேவி 11 சனவரி 2024 அன்று தனது 73ஆவது வயதில் இறந்தார்.[1]

சுசிறீ தேவி

அரசியல்

தொகு

தேவி தனது அரசியல் வாழ்க்கையை 1971-இல் தொடங்கினார்.[2] 1990ஆம் ஆண்டு ஜனதா தள வேட்பாளராக ஒடிசா மாநில ஆவுல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1995 வரை இப்பதவியில் இருந்தார்.

பின்னர் தேவி 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில், இவர் மே 2002இல் தொழில்துறை குழுவின் உறுப்பினராக இருந்தார். ஆகத்து 2002-இல் நீர்வள அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். மூன்று ஆண்டுகள் ஒடிசாவின் லிப்ட் நீர்ப்பாசன் கழக இயக்குநராக இருந்தார். இவர் ஒடிசா உயர்நிலைக் கல்வித் துறையில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தார். இவர் நான்கு ஆண்டுகள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார். தேவி இரண்டு ஆண்டுகள் பீகாரில் பூரியில் உள்ள சமசுகிருத பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Nayak, Subadh (2024-01-10). "Former Aul MLA Sushree Devi passes away". KalingaTV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-10.
  2. "Sushree Devi". Archived from the original on 20 September 2022. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018. {{cite web}}: Text "MLA Profile AUL CONSTITUENCY Reservation Type:- General Tenth Assembly (03/03/1990-15/03/1995)" ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசிறீ_தேவி&oldid=3897138" இலிருந்து மீள்விக்கப்பட்டது