சுசிலா திரியா
சுசிலா திரியா (Sushila Tiriya) ஒரு சமூக சேவகரும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். இவர் 1986 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு ஒடிசாவின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டார். 1994 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்குச் சென்றார்.
சுசிலா திரியா | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
தொகுதி | ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 பெப்ரவரி 1956 காளுகாமன், மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | காளுகாமன், மயூர்பஞ்ச் மாவட்டம், ஒடிசா |
As of 22 நவம்பர், 2010 மூலம்: [1] |
. [1]
குடும்பம் மற்றும் கல்வி
தொகுசுசிலா திரியா ஒரு சுதந்திர போராட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஸ்ரீ ரூப்நாராயண் திரியா ஒரு பள்ளியைத் திறந்து பழங்குடி சமூகத்திற்கு கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். [1]
அவர் உத்கல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [2]
அரசியல் வாழ்க்கை
தொகு24 வயதில், சுஷிலா திரியா இளைஞர் காங்கிரசில் (I) சேர்ந்தார், ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருந்து முறையே 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் அதன் தலைவராகவும் துணைத் தலைவராகவும் ஆனார். [1]
1986 இல், அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலத்தில், 1986-87 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அணுசக்தி மற்றும் பெருங்கடல் மேம்பாட்டு[தொடர்பிழந்த இணைப்பு] அமைச்சகம், 1987-88ல் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் 1988-89ல் தகவல் தொடர்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக்களில் உறுப்பினராக பணியாற்றினார். [1]
1987 முதல் 1993 வரை, அவர் இந்திய இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். அவர் அரசாங்க ஈட்டுறுதித் திட்டங்கள் (1988-89) மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நலன் (1989-92) குழுக்களில் உறுப்பினராக இருந்தார். [1]
1994 ஆம் ஆண்டில், பத்தாவது மக்களவைத் தேர்தலில் எஸ்.டி இருக்கைக்காக போட்டியிட்டு மயூர்பஞ்சில் இருந்து வென்றார். அந்த காலப்பகுதியில், அவர் 1994 முதல் 1996 வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் குடிமைப்பொருள்கள் வழங்கல் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராக பணியாற்றினார். [1]
1995 முதல், அவர் அகில இந்திய காங்கிரசு குழுவின் இணை செயலாளராக பணியாற்றினார், அதோடு 1996 இல் மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
சமூகப்பணி
தொகுகிராமப்புற ஏழை பழங்குடியினர் மற்றும் வேலையற்ற இளைஞர்களின் முன்னேற்றத்தில் சுசிலா திரியாவுக்கு சிறப்பு ஆர்வங்கள் இருந்தன. அவர் பழங்குடியின மக்களின் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். 'எஸ்யுஜிஏஆர்'; `ஸ்வயன் விகாஸ் சமிதி' மற்றும் கிராமப்புற இளைஞர் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகம். பழங்குடியின இளைஞர்களை மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தங்கள் திறனை மேம்படுத்த ஊக்குவிப்பதற்காக பழங்குடியினர் சங்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மயூர்பஞ்ச் மாவட்டத்தில், காளுகாமன் கிராமத்தில் இரண்டு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "lsor02". 164.100.47.194. Archived from the original on 2017-07-29. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.
- ↑ ADR. "SUSHILA TIRIYA(Indian National Congress(INC)):Constituency- Mayurbhanj(ORISSA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2017-07-29.