சுசீலா கணேசு மவலாங்கர்
சுசீலா கணேசு மவலாங்கர் (Sushila Ganesh Mavalankar)(4 ஆகத்து 1904 - 11 திசம்பர் 1995) என்பவர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் 1956ஆம் ஆண்டு அகமதாபாத்திலிருந்து முதலாவது மக்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇராமகிருஷ்ண கோபிநாத் குர்ஜார் டேட்டின் மகளான சுசீலா, பம்பாய் மாநிலத்தில் 1904 ஆகத்து 4 அன்று பிறந்தார். மேலும் பள்ளிப்படிப்பைப் பல்கலைக்கழக நுழைவு தகுதி முன் வரை படித்தார்.[1]
தொழில்
தொகுமாவலங்கர் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். மகாத்மா காந்தியின் அழைப்பின் பேரில் 1942-ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். இது பிரித்தானிய அதிகாரிகளால் இவரைச் சிறையில் அடைக்க வழிவகுத்தது.[2] சூன் 1953-ல் நடைபெற்ற எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் மாவலங்கர் கலந்து கொண்டார்.[1]
பிப்ரவரி 1956-ல் கணேஷ் மாவலங்கரின் மரணம் அகமதாபாத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக கணேசு மவலாங்கர் மனைவியான சுசீலா கணேசு மவலாங்கரை வேட்பாளராக நிறுத்தியது. இவர் முதலாவது மக்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே இவரது பதவிக்காலம் முடிந்தது.[3][4] Her term finished the following year.[2] இவர் பாகினி சமாஜத்தின் தலைவராகவும் பணியாற்றினார். மேலும் பல சமூக அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்தார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசுசீலா கணேஷ் வாசுதேவ் மாவலங்கரை மார்ச் 1921-ல் மணந்தார். இவர்களுக்கு நான்கு மகன்கள் இருந்தனர்[1] கணேஷ் மாவலங்கர் மக்களவையின் முதல் சபாநாயகரானார். சுசிலா மாவலங்கர் 11 திசம்பர் 1995 அன்று அகமதாபாத்தில் இறந்தார்.[2] இவர்களது மகன் புருசோத்தம் மாவலங்கரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Jain, C. K. (1993). Women Parliamentarians in India. Surjeet Publications. p. 697.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Obituary References". Parliament of India. 22 December 1995. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017.
- ↑ Results of Bye-elections. Election Commission of India. 1957. p. 11.
- ↑ Gazette of India. Controller of Publications. 1956. p. 615.
- ↑ Press Trust of India (15 May 2002). "Pusushottam Mavalankar passes away". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/Pusushottam-Mavalankar-passes-away/articleshow/3800706.cms. பார்த்த நாள்: 25 November 2017.