புருசோத்தமன் மாவலங்கர்

இந்திய அரசியல்வாதி

புருசோத்தம் கணேஷ் மாவலங்கர் (3 ஆகஸ்ட் 1928, அகமதாபாத் – 14 மார்ச் 2002, அகமதாபாத் ) ஒரு இந்திய அரசியல் விஞ்ஞானி, கல்வியாளர் மற்றும் இரண்டு முறை தொடர்ந்து சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

மாவலங்கர் மக்களவையின் முதல் சபாநாயகர் கணேஷ் வாசுதேவ் மாவலங்கரின் மகன் ஆவார். 1972 ஆம் ஆண்டில், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் தொகுதியில் இருந்து இடைத்தேர்தலில் 5வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 ஆம் ஆண்டில், குஜராத்தில் உள்ள காந்திநகரில் இருந்து ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஆறாவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 தேர்தலில் காந்திநகர் தொகுதியில் தோல்வியடைந்தார். மாவலங்கர் 14 மார்ச் 2002 [1] இறந்தார்.

ஹரோல்ட் லாஸ்கி நிறுவனம் தொகு

புருசோத்தம் கணேஷ் மாவலங்கர் (அண்ணா சாஹேப்) இங்கிலாந்தில் ஹரோல்ட் லாஸ்கியின் வழிகாட்டுதலின் கீழ் படித்தார் மற்றும் 1954 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் ஹரோல்ட் லாஸ்கி அரசியல் அறிவியல் நிறுவனத்தை நிறுவினார்.

இந்த நிறுவனம் அரசியல் அறிவியலில் ஏராளமான பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களை வெளியிட்டது.[2]

அவசரநிலைக்கு எதிரான போராட்டம் தொகு

புருசோத்தம் மாவலங்கர் இந்திரா காந்தி தேசிய அவசரகால நிலையை விதித்தபோது சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூலை 23 அன்று நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர், மாவலங்கர் அவரது குடும்பத்தின் தகுதி நிலை காரணமாக கைது செய்யப்படவில்லை (அவரது தந்தை கணேஷ் வாசுதேவ் மவலங்கர் மக்களவையின் முதல் சபாநாயகர் ஆவார்). மாவலங்கர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு அவசரநிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Ex-MP Mavlankar Dead". The Tribune. 16 March 2002. http://www.tribuneindia.com/2002/20020316/nation.htm#briefs. பார்த்த நாள்: 11 March 2011. 
  2. "List of publications by the Harold Laski Institute of Political Science, Ahmedabad". பார்க்கப்பட்ட நாள் 2011-03-16.
  3. "A'bad MP up in arms - The Times of India June 25, 2008".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருசோத்தமன்_மாவலங்கர்&oldid=3480692" இலிருந்து மீள்விக்கப்பட்டது