காந்திநகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

காந்திநகர் மக்களவைத் தொகுதி மேற்கு இந்தியாவிலுள்ள குசராத் மாநிலத்தின் 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது.

காந்திநகர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தற்போதுஅமித் சா
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967–முதல்
மாநிலம்குசராத்
மொத்த வாக்காளர்கள்1,733,972
சட்டமன்றத் தொகுதிகள்காந்திநகர் வடக்கு, கலோல், சானாந்து, காட்லோடியா, வேசல்பூர், நாரண்புரா, மற்றும் சபர்மதி.

சட்டசபைத் தொகுதிகள் தொகு

2014ல் காந்திநகர் மக்களவைத் தொகுதி பின்வரும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.

சட்டமன்ற தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி பெயர் ஓதுக்கீடு
36 காந்திநகர் வடக்கு இல்லை
38 கலோல் இல்லை
40 சானாந்து இல்லை
41 காட்லோடியா இல்லை
42 வேசல்பூர் இல்லை
45 நாரண்புரா இல்லை
55 சபர்மதி இல்லை

பிரபலங்கள் தொகு

 
முன்னாள் இந்திய துணைப் பிரதமர் அத்வானி 1998முதல் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்[2]
  • 1991ல் லால் கிருட்டிண அத்வானி முதன் முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றார், 1996ல் அவாலா மோசடி குற்றச்சாட்டினால் அத்தேர்தலில் போட்டியிடவில்லை. பின்பு 1998 முதல் தொடர்ச்சியாக ஐந்து முறை வெற்றிபெற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952-1962 உருவாக்கப்படவில்லை
1967 சோம்சந்த்பாய் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு
1971 நிறுவன காங்கிரசு
1977 புருசோத்தம் மாவலங்கர் பாரதிய லோக் தளம்
1980 அம்ரித் படேல் இந்திய தேசிய காங்கிரசு
1984 ஜி. ஐ. படேல் இந்திய தேசிய காங்கிரசு
1989 சங்கர்சிங் வகேலா பாரதிய ஜனதா கட்சி
1991 லால் கிருஷ்ண அத்வானி
1996 அடல் பிஹாரி வாஜ்பாய் (லக்னோ தொகுதி தக்கவைக்கப்பட்டது)
1996^ விஜய்பாய் படேல் (இடைத்தேர்தல்)
1998 லால் கிருஷ்ண அத்வானி
1999
2004
2009
2014[3]
2019 அமித் சா

^ இடைத்தேர்தல்

மேற்கோள்கள் தொகு