சுசேதா பைதே சாபேகர்

இந்திய நடனக் கலைஞர், நடன அமைப்பாளர்

சுசேதா பைதே சாபேகர் (Sucheta Bhide Chapekar) (பிறப்பு: 1948 திசம்பர் 6) இவர் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைரும் மற்றும் நடன இயக்குனருமாவார் மேலும் இவர் பரதநாட்டியம் மூலம் நன்கு அறியப்படுகிறார். பாரம்பரிய நடனத்தில் கற்பித்தல் மற்றும் பரப்புதல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் ஒரு அறக்கட்டளையான "கலாவர்தினி" என்ற நிறுவனத்தின் நிறுவனருமாவார். அங்கு இவர் பரதநாட்டியத்தையும் கற்பிக்கிறார்.[1] இவர் சங்கீத நாடக அகாதமி விருதினையும் (2007) பெற்றவராவார்.

சுசேதா பைதே சாபேகர்
படித்த இடங்கள்
  • Balmohan Vidyamandir

ஆரம்பம்

தொகு

1948 இல் பிறந்த சாபேகருக்கு 1963 ஆம் ஆண்டில் அரங்கேற்றம் இருந்தது. ஆச்சார்யா பார்வதி குமார் மற்றும் கே.பி. கிட்டப்பா பிள்ளை ஆகியோரின் கீழ் பயிற்சியினை பெற்றார்.[2] அடுத்தடுத்த ஆண்டுகளில், இவர் 1974 இல் சென்னை, மியூசிக் அகாதெமியில் ஒரு நிகழ்ச்சியை உள்ளடக்கிய பல உள்ளூர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திருமணத்திற்குப் பிறகு, இவர் புனேவிற்குச் சென்றார்.

நிகழ்ச்சி

தொகு

நீலக்கண்ணின் அழகு என்று அழைத்த ஜே. ஆர். டி டாடாவால் ஊக்கப்படுத்தப்பட்ட இவர், 1982 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே நிகழ்ச்சி நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். சுற்றுப்பயணத்தின் போது, இவர் லண்டன், பாரிஸ் மற்றும் ரோட்டர்டாமில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். 1980 களில், இவர் தனது சொந்த மாநிலமான மகாராட்டிராவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த நேரத்தில்தான், பரதநாட்டியத்திற்கு மாநிலத்தில் பெரிய பின்தொடர்தல் இல்லை என்பதை உணர்ந்தார். பின்னர் தனது இசை நிகழ்ச்சிகளில் மராத்தி மற்றும் இந்தி பாடல்களை கலக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இது இறுதியில் நிருத்ய கங்கா என்ற பாரதநாட்டிய இசை நிகழ்ச்சியை உருவாக்க வழிவகுத்தது. இது சுமார் 80 பாடல்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் இந்துஸ்தானி பாரம்பரிய இசையை அடிப்படையாகக் கொண்டவை. பாரம்பரிய நடனத்தில் கற்பித்தல் மற்றும் பரப்புதல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் கலாவர்தினி என்ற ஒரு தொண்டு அறக்கட்டளையை சாபேகர் நிறுவினார்.

ஆவணப்படம்

தொகு

2008 ஆம் ஆண்டில், திரைப்படத் தயாரிப்பாளர் அமிர்தா மகாதிக் [3] இவரின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து வயோமகமி என்ற ஒரு ஆவணப்படத்தை [4] இயக்கியுள்ளார். சாபேகரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வயோமகமியை [5] கலாவர்தினி தயாரித்து மகாராட்டிராவின் புனே, கணேஷ் கலா கிரிதா மஞ்சில் காண்பிக்கப்பட்டது. பத்ம விபூசண் சோனல் மான்சிங் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சாபேகர் எழுதிய நிருத்யாத்மிகா என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.[6]

குடும்பம்

தொகு

சாபேகருக்கு திருமணமாகி, அருந்ததி பட்வர்தன் என்ற மகள் உள்ளார். இவரது மகளும் பயிற்சி பெற்ற நடனக் கலைஞராவார். 2007 ஆம் ஆண்டில், சாபேகருக்கு பாரம்பரிய நடனத்திற்கான பங்களிப்பிற்காக சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. "Dr. Smt. Sucheta Chapekar". Kalavardhini. Archived from the original on 8 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Dr. Sucheta Bhide Chapekar: 60th birthday celebrations at Pune". narthaki.com. 5 January 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2016.
  3. http://archive.indianexpress.com/news/a-classic-gathering/390793/
  4. http://www.cultureunplugged.com/documentary/watch-online/play/2894/Vyomagami
  5. https://www.imdb.com/title/tt4567652/
  6. TNN,"Dance festival to mark Sucheta Chapekar's 60th birthday", Times of India, 26 November 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசேதா_பைதே_சாபேகர்&oldid=3930041" இலிருந்து மீள்விக்கப்பட்டது