சுண்டல்
சுண்டல் ஒருவகை சிற்றுண்டியாகும். இது மகாசிவராத்திரி, சரசுவதி பூஜை போன்ற சில இந்து சமயத் திருநாட்களில் இறைவனுக்குப் படைக்கும் நைவேத்தியமாக உள்ளது. சென்னை மெரீனா மற்றும் பாண்டிச்சேரி கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் சிற்றுண்டிகளில் முக்கியமான ஒன்றாகும். சில கிராமப்புற தேநீர்க்கடைகளிலும் இந்தச் சிற்றுண்டி கிடைக்கிறது. பொதுவாக கொண்டைக் கடலையில் (வெள்ளை, கருப்பு) செய்யப்படும் சுண்டல், பாசிப் பயிறு, கடலைப்பருப்பு, கொள்ளு, தட்டைப் பயிறு, மொச்சைப் பயிறு போன்றவற்றிலும் சுண்டல் செய்யப்படுகிறது.
தயாரிக்கும் முறை
தொகுவேகவைத்த பயிறைச் சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுந்து, கார மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துத் தாளித்து இறக்கினால் சுவைமிக்க சுண்டல் கிடைக்கும்.[1]
சான்றுகள்
தொகு- ↑ "செய்முறை". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2015.