சுதர்சன் ஆகரபு

இந்திய அரசியல்வாதி

சிறீ சுதர்சன் ஆகரபு (Shri Sudarshan Akarapu)(5 மார்ச் 1954 - 20 ஜூலை 2011) [1] தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராகவும், தெலுங்கு தேசம் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்தார். [2] 20 ஜூலை 2011 அன்று ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாரிய மாரடைப்பால் இறந்தார். [3]

ஆகரபு சுதர்சன்
சட்டப்பேரவை உறுப்பினர்
தொகுதிசூர்யபேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1954-03-05)5 மார்ச்சு 1954
ஐதராபாத் இராச்சியம், இந்தியா
இறப்பு20 சூலை 2011(2011-07-20) (அகவை 57)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிள்ளைகள்இரமேசு ஆகரபு
வாழிடம்சூர்யபேட்டை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சுதர்சன் இந்தியாவின் தெலங்காணாவின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள சூர்யபேட்டையில் பிறந்தார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

தொகு

முதலில் சோசலிச சித்தாந்தத்துடன் இருந்த இவர் பின்னர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். இவர் 1989 மற்றும் 1994 இல் சூர்யபேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராக இரண்டு முறைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1997 முதல் 1999 வரை ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். சுதர்சன் 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் மற்றும் முழு ஆறு ஆண்டுகள் பதவி வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றினார். [4]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதர்சன்_ஆகரபு&oldid=4109025" இலிருந்து மீள்விக்கப்பட்டது